ஷ்யாம் நியூஸ்
05.03.2025
தமிழகத்துக்கு 61 MP தமிழக கட்சிகள் உறுதி !
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் சூடு பிடித்துவரும் வேளையில் அனைத்து கட்சி கூட்டம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமயில் சென்னையில் நடைபெற்றது .
இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநிலமான தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் குறித்து விவாதிக்க, மாநில அரசு புதன்கிழமையன்று (மார்ச் 05) இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தியது . இந்தக் கூட்டத்தில் 63 அரசியல் காட்சிகள் கலந்து கொண்டன .
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி ஆகியவை அறிவித்தன. இதுதவிர, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இப்போது உள்ள 543 தொகுதிகள் தொடர்ந்தால், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்கிறார்கள். அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டால், நமக்குக் கூடுதலாக 22 இடங்கள் கிடைக்க வேண்டும்.
இந்தத் தொகுதி மறுசீரமைப்பு என்பது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல – ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல். தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது எழுப்பப்படும் குரலையே, மத்திய அரசு ஏற்க மறுக்கும் நிலையில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ, குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும்" என்று கூறியதோடு, முதலமைச்சர் சில தீர்மானங்களை முன்மொழிந்தார்.தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றக்கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
கலந்துகொண்ட அணைத்து அரசியல் கட்சிகளும் 7.18 சதவீத பிரதிநிதித்துவம் வேண்டும் என்று ஒருமித்த கருத்தாக உள்ளதால் இதற்கு மத்திய அரசு செவிசாய்த்தல் தமிழகத்துக்கு இனி வரும் காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 61 உயரும் .