ஷ்யாம் நியூஸ்
03.03.2025
சீமான் வழக்கு இடைக்கால தடை வழங்கியது உச்சநீதிமன்றம் !
வடஇந்தியாவில் பிரபலமாக இருக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரை களமிறக்கி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வழக்கு இடைக்கால தடை வாங்கி உள்ளார்.நடிகை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு தடைக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு இன்று விசாரிக்கப்பட்டது.சீமானுக்கு எதிராக நடிகை கொடுத்த பாலியல் வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் கலந்து பேசி உடன்பாடு காண அறிவுறுத்தி, 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் .உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சீமானுக்கு சாதகமாக உத்தரவு வர அவரின் வழக்கறிஞரின் வாதம் முக்கிய காரணம் ஆகும். வடஇந்தியாவில் பிரபலமாக இருக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரை களமிறக்கி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த வழக்கின் போக்கை மாற்றி உள்ளார். சீமான் வழக்கறிஞர் இந்த வழக்கு, ஜஸ்டிஸ் பி.வி. நாகரத்னா மற்றும் ஜஸ்டிஸ் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் முன் பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கில் சீமானுக்கு ஆதரவாக மிக முக்கியமான வழக்கறிஞரான நிர்நிமேஷ் துபே ஆஜராகி உள்ளார்.