SHYAM NEWS
03.03.2025
அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000.! உதயநிதி ஸ்டாலின் !
2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராகி வருகிறது. தற்போது தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பலருக்கு வழங்கப்படாததால் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த நிலையில் மே மாதத்திலிருந்து அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதனை உறுதி செய்வதுபோல பேசியிருக்கிறார் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின். மேலும் பட்ஜெட் தாக்கலின் போது இந்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.