தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் கொள்ளை; அமைச்சர் துரைமுருகன் பதவி விலக வேண்டும்- -பாஜக வலியுறுத்தல்
SHYAM NEWS 27.02.2025 தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் கொள்ளை; அமைச்சர் துரைமுருகன் பதவி விலக வேண்டும்- -பாஜக வலியுறுத்தல் த மிழகத்தில் தடையின்றி நடந்து வரும் மணல் கொள்ளைக்கு பொறுப்பேற்று அமைச்சர் துரைமுருகன் பதவி விலக வேண்டும்' என்று ஆவேச அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத். தமிழகம் முழுவதும் தற்போது வரலாறு காணாத மணல் கொள்ளைகள் முழுவீச்சில் அரங்கேறி வருகின்றன. நீர்வளத் துறையின் அமைச்சரே மணல் வளத்தை திருடுபவர்களுக்கு, கனிம கொள்ளையர்களுக்கு துணை போவதால் தமிழக அரசு அதிகாரிகளின் சிவப்பு கம்பள விரிப்புடன், உச்சநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி மணல் கொள்ளை தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக லாரிகளில் மணல் கடத்தல் போடுகிறது. மிக முக்கியமாக மணல் கொள்ளை நடக்கும் பகுதி அருகில் முடியனூர் மற்றும் எட்டு வழியோர குடியிருப்பு கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பன்னாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு தண்ணீர் அனுப்பும் திட்...