காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க ஆதரவு கொடுப்பதால் முதல்வர் ஸ்டாலினுக்கு பி.ஜே.பி நெருக்கடி கொடுக்கிறது. மாநில துணை தலைவர் சண்முகம் குற்றச்சாட்டு
ஷ்யாம் நீயூஸ்
20.06.2023
காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க ஆதரவு கொடுப்பதால் முதல்வர் ஸ்டாலினுக்கு பி.ஜே.பி நெருக்கடி கொடுக்கிறது.மாநில துணை தலைவர் சண்முகம் குற்றச்சாட்டு.
தூத்துக்குடி ராகுல் காந்தியின் 53வது பிறந்தநாளை ஒட்டி மடத்தூரில் நடைபெற்ற விழாவிற்க்கு முன்னாள் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆரோக்கியம் தலைமை வகித்தார். மண்டல தலைவர் செந்தூர் பாண்டி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜான் பிரிட்டோ காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட் புக் பெண்களுக்கு சேலை அரிசி ஆகியவற்றை வழங்கி மாநில துணை தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம் பேசுகையில் 156 நாட்கள் 3750 கிலோ மீட்டர் ராகுல் காந்தி நடைபயணம் மூலம் மக்களை சந்தித்து உள்ளார். எதற்காக என்றால் நாட்டிற்க்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனை தான் காரணம். 9 ஆண்டு ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க பாடுபட்டோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தவறான கருத்தாகும். 1920-ல் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவர் ஆக முடியும், என்று இருந்த நிலையை நீதிக் கட்சி தோன்றிய காலத்திற்க்கு பின் எல்லோரும் மருத்துவர் ஆகலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர். இதனால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
ராகுல் காந்தியின் பதவி பறிப்பு அநாகரீகமான செயல் இந்திய திருநாட்டின் மக்கள் மனதில் ராகுல் காந்தி உள்ளார். 9 ஆண்டுகளுக்கு முன் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளன. 2015-ல் நடைபெற்ற சம்பவத்திற்க்கு 2023-ல் பி.ஜே.பி நடவடிக்கை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியை தி.மு.க ஆதரிப்பதால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை பழிவாங்கி வருகின்றனர். தவறு செய்தவர்கள் யார்? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த கால கட்டத்திற்க்கு பின்பு மறைந்த முதலமைச்சர் nஐயலலிதா எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் இவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? தவறு நிகழ்த்துள்ளது என்று கருதப்பட்டால் வழக்கு பதிவு செய்வது நடைமுறை தான் அதை முறையாக செய்ய வேண்டும். கைது செய்யும் முன் விசாரணை என்ற பெயரில் 18 மணி நேரம் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டு குடிப்பதற்க்கு தண்ணீர் கூட வழங்காமல் கடுமையான முறையில் துண்புறுத்தியுள்ளனர். கைதுக்கு பின்னர் மருத்துவரின் பரிசோதனையில் இருதய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசு மருத்துவர் கூறிய பின்பும் நம்பவில்லை.
பின்னர் மத்திய அரசின் இ.எஸ்.ஐ மருத்துவர்கள் இவற்றையே முன்மொழிந்துள்ளனர். இதையும் நம்ப மாட்டோம் என்று அடம் பிடித்துக் கொண்டு அமலாக்கத்துறை எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும் என்கிறார்கள். எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டவருக்கு தீடீர் உடல் நலக் குறைவு எப்படி வரும் என்று கேட்கிறார்கள். 18 மணி நேரம் அடைத்து வைத்திருந்தால் சாதாரண மனிதருக்கும் என்ன மனநிலை வரும் என்று புரியாதவர்களாக உள்ளனர். பழனி திண்டுக்கல் இரு ஊர்களை சேர்ந்த இருவர் பணம் பெற்றுக் கொண்டு போக்குவரத்து துறையில் பணி வழங்க வில்லை. என்ற குற்றச்சாட்டை எழுத்து மூலமாக காவல் நிலையத்தில் புகாராக கொடுத்து உள்ளனர்.
பின்னர் நீதிமன்றம் சென்ற வழக்கில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் எந்த இடத்திலும் செந்தில் பாலாஜி என்ற பெயர் இடம் பெறவில்லை. பழி வாங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் இது அறங்கேற்றப்பட்டுள்ளது. அண்ணாமலை உப்பு திண்ணவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்கிறார். அப்படியானால் கர்நாடகாவில் நடைபெற்ற ஒரு சோதனையில் பி.ஜே.பி எம்.எல்.ஏ மற்றும் அவரது உறவினர்கள் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் மொத்தம் 8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இன்று வரை அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. யார் தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும் அண்ணாமலையை நேரடியாக எதிர் கொண்டு செந்தில் பாலாஜி அரசியலில் வெற்றி பெற்றதால் பழிவாங்கும் போக்கு தொடர்கிறது. பிரதமர் மோடியை எதிர்த்தால் சோதனை என்ற பெயரில் மிரட்டுவதும் அவரை ஆதரித்தால் அதை கண்டு கொள்ளாமல் விடுவதும் தான் இவரது ஆட்சியின் சாதனை. 2002-ல் இந்தியாவிற்க்கு அந்நிய சக்திகளால் ஏற்பட்ட காலத்தில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கொண்டு வந்த சட்டம் இப்போது யாரும் இங்கு ஆயுதம் கடத்தவில்லை சட்டத்தை தவறாக பயன் படுத்தி வருகின்றனர். வரும் காலங்களில் ராகுல் காந்தியின் குரல் இந்தியா முழுவதும் ஒழிக்கும். பி.ஜே.பி இந்தியா முழுவதும் தோல்வி அடையும். என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளதால் பல்வேறு தரப்பினரின் உரிமையை பறிக்கின்றனர்.
சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு எதுவும் வழங்கவில்லை. ஆளுநர் ரவி யோக்கியன் போல் பேசுகிறான். மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை அடக்க முடியாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். எதிர்கால இந்தியாவை நல் வழி படுத்தும் தலைவராக ராகுல் காந்தி வலம் வருவார். இளைஞர்கள் நல்வழியில் செல்ல வேண்டும் எதிர்கால இந்தியா வரும் தலைமுறைக்கு வழிகாட்டும் வழியில் இருக்க வேண்டும். காங்கிரஸை அனைவரும் வரும் காலங்களில் ஆதரிக்க வேண்டும் என்று பேசினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் கவுன்சிலர் சந்திரபோஸ் மாநகர தி.மு.க இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல் ஐ.என்.டி.யு.சி. செயலாளர் ராஜ் காங்கிரஸ் சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் மைதீன் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் மண்டல தலைவர் சேகர் ஐசன் சில்வா மாநில பேச்சாளர் அப்துல் மஜீத் அமைப்பு சாரா அணி தலைவர் நிர்மல் கிரிஸ்டோபர் பொதுச்செயலாளர் கோபால் நிர்வாகிகள் செல்வராஜ் விஐயராஜ் குமாரமுருகேசன் நாராயணன் பொன்ராஜ் அந்தோனிராஜ் ராஜேஷ் துரைபாண்டி மதிவாணன் என்ஸ்டன் பெர்னார்ட் அமித் ஆண்டனி சாமுவேல் மகேஸ்வரன் விஸாக் மற்றும் முன்னாள் கவுன்சிலர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராபர்ட் நன்றியுரை ஆற்றினார்.