தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் மேலூர் ரயில்வே அதிகாரிகளுடன் கலந்தாய்வு
ஷ்யாம் நீயூஸ்
01.06.2022
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் மேலூர் ரயில்வே அதிகாரிகளுடன் கலந்தாய்வு
தூத்துக்குடி தென்னகரயில்வே மூலம் மேலூர் ரயில் நிலையத்தை புதிய பேருந்து நிலையம் அருகே சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேலை நடைபெற்று நடைமுறைக்கு வந்துள்ளது. மேற்படி மேலூர் ரயில்நிலையத்தில் கூடுதலாக நடைபாதை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அமைச்சர் கீதாஜீவன் தெற்கு ரயில்வே அலுவலரிடம் உழவர்சந்தை முன்பும் புதிய பேருந்து நிலையம் முன்பும் படிக்கட்டுகள் அமைத்திடவும், தெற்கு பகுதியில் கூடுதலாக ஒரு இடத்தில் படிக்கட்டு அமைத்திடவும், மேலும் இரண்டு பிளாட்பிளாரங்களை இணைக்கும் வண்ணம் ரயில்வே நடைமேம்பாலம் அமைத்திடவும் கோரிக்கை வைத்துள்ளார். மேற்படி கோரிக்கையை உடனே செய்து தருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும் தெற்கு பகுதியில் கேவிகேநகர் உள்ள கீழமேல் சாலை மற்றும் தென்வடல் குறுக்குசாலைகள் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் போது ரயில்வே துணை திட்ட பொது மேலாளர் சரவணன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன். மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மற்றும் ஜீவன்ஜேக்கப், அல்பட், தூத்துக்குடி ரயில்வே மேலாளர், பொறியாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.