மூடப்படும் 500 டாஸ்மாக் கடை பணியாளர்களை அருகில் உள்ள கடைகளில் பணியில் அமர்த்தவேண்டும் ஏஜடியூசி சங்கம் கோரிக்கை.
ஷ்யாம் நீயூஸ்
21.06.2023
மூடப்படும் 500 டாஸ்மாக் கடை பணியாளர்களை அருகில் உள்ள கடைகளில் பணியில் அமர்த்தவேண்டும் ஏஜடியூசி சங்கம் கோரிக்கை.
நாளை(22.06.2023) முதல் தமிழக அரசின் உத்தரவுபடி 500 டாஸ்மாக் கடைகளை மூட நிர்வாகம் முடுவு செய்துள்ளது.
மூடப்படும் 500 டாஸ்மாக் கடை பணியாளர்களை அருகில் உள்ள கடைகளில் பணியில் அமர்த்தவேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் ஏஐடியூசி பணியாளர் சங்கம் மாநிலச் செயலாளர் தனசேகரன் கோரிக்கை வைத்துள்ளார். அவர் தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்
மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தபடி நாளை(22/6/23) முதல் 500 மதுகடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளதை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி.சார்பில் வரவேற்கிறோம்.மேலும் மதுபான கடைகள் செயல்படும் நேரத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.அதே சமயம் மூடப்படும் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களை உடனடியாக மூடப்படும் கடைகளுக்கு அருகில் உள்ள கடைகளில் பணிபுரிய உத்தரவு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.