கள்ள பட்டா தயார் செய்யும் இடமா தூத்துக்குடி தாலுகா அலுவலகம் ?அரசு மருத்துவர் இடத்தையே கள்ள பட்டா போட்டு கொடுத்த வருவாய் அலுவலர்கள்
ஷ்யாம் நீயூஸ்
13.06.2023
கள்ள பட்டா தயார் செய்யும் இடமா தூத்துக்குடி தாலுகா அலுவலகம் ?அரசு மருத்துவர் இடத்தையே கள்ள பட்டா போட்டு கொடுத்த வருவாய் அலுவலர்கள்!
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் பட்டா பிரிவு ஊழியர்கள் தயவில் ஏராளமான கள்ள பட்டாக்கள் தயார் செய்து அதை விநியோகம் செய்துள்ளதாக தகவல் தெரிகிறது . பாதிக்கப்பட்ட சிலர் தங்கள் நிலம் அடுத்தவர் பெயருக்கு கள்ளதனமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளதை அறிந்த நில உரிமையாளர்கள் முறையீடு செய்து வட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் ஆண்டு கணக்கில் கிடப்பில் போட்டு வேடிக்கை பார்த்து வருகின்றனர். தூத்துக்குடி தாலுகா அலுவலர்கள் கள்ள பட்டா போடும்போது மட்டும் ஒரு நாள் அவகாசம் கூட இல்லாமல் பட்டாக்கள் கையெழுத்தாகி விடுவித்துவிடுகின்றனர். பொதுமக்களே கள்ளபட்டாவை கண்டுபிடித்து நல்ல பட்டாவாக மாற்றி தாருங்கள் என கேட்டால் ஆண்டு கணக்கில் இழுத்து வருகின்றனர். இந்தக் கள்ள பட்டா சிக்கலில் தன் நிலத்தை பறிகொடுத்து மாட்டிய தூத்துக்குடி அரசு மருத்துவர்( ராவணன் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) ஒருவர் ஆண்டு கணக்கில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் வட்டாட்சியருக்கும் மனுக்கள் மேல் மனுக்கள் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சேர்ந்து போய் மனச்சோர்வில் காணப்படுகிறார் மற்றும் ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய நில பட்டாவை அவரின் அனுமதி இல்லாமல் வாரிசு சான்றுகள் இறப்புச் சான்றுகள் எதுவுமே இல்லாமல் வெறும் நான்காயிரம் ரூபாய் பணத்திற்காக வேறு ஒரு நபருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்துள்ளனர் என்ற தகவலும் தெரிய வருகிறது தற்போது அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தான் பதிக்கப்பட்டது கூட தெரியாமல் இரு குழந்தைகள் உள்ள நிலையில் இருக்க இடமில்லாமல் தெருக்களில் சுற்றித் திரிவதாக தெரிகிறது. இதுபோன்று கள்ள பட்டாவை தயார் செய்து கொடுப்பதில் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் மிக முனைப்புடன் வேகமாக செயல்பட்டு கள்ள பட்டாவை தயார் செய்து கொடுத்து வருகின்றனர் கள்ளபட்டாவாக மாற்றி உள்ளதை அறிந்த பொதுமக்கள் நல்ல பட்டாவாக மாற்றித் தாருங்கள் என்று தற்போது பட்டா பிரிவில் பணிபுரியும் ஊழியர் ராதா என்பவரை கேட்டால் அவர்களுக்கு வருகின்ற கோபம் கொஞ்ச நஞ்சமல்ல வாங்கித் தரும் போது தான் வாங்கித் தருவோம் நீங்க எதுக்கும் அந்த வி ஏ ஓ வை பாத்துட்டு வாங்க இல்லன்னா நீங்க வராதீங்க என்ற தோரணையில் பேசி வருகிறார் என பாதிக்கப்பட்ட நபர் தெறிவிக்கிறார். நம் தகவல் படியே பட்டா பிரிவில் இரண்டு மூன்று கள்ள பட்டாகள் இருக்கின்றன. தெரிந்தே இவ்வளவு இருக்கிறது என்றால் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை கள்ளபட்டாக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தெரியவில்லை. பட்டா பிரிவு ஊழியர்களின் நடவடிக்கையால் நில உரிமையாளர்கள் மத்தியில் தங்கள் பெயரில்தான் பட்டா இருக்கிறதா இல்லையென்றால் கள்ள பட்டா போட்டு விற்று விட்டார்களா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஆகவே கடந்த 10 ஆண்டுகளாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சரி பார்க்க ஒரு குழு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர் மற்றும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனுக்களை குப்பையில் போட்டுவிட்ட பட்டா பிரிவு அதிகாரிகளால் மீண்டும் அந்த மனுக்களை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் போனது போகட்டும் இன்னும் ஒரு மனு கொடுங்கள் என்று கெஞ்சுகின்றனர் கொடுத்த மனுவுக்கு என்ன பதில் என்று கேட்டால் வருகின்ற கோபத்துக்கு அளவே இல்லை மக்களை முட்டாளாக நினைக்கும் பட்டா பிரிவு அதிகாரிகளில் மீது தக்க நடவடிக்கை எடுத்து கள்ள பட்டாக்களை கேன்சல் செய்து மீண்டும் பழைய பட்டாபடி இருப்பதற்கான நடவடிக்கையை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தற்போது உள்ள சூழலில் அரசு மருத்துவரின் புதிய மனுவிற்கு சார் ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுத்து பதில் அளிக்குமாறு தூத்துக்குடி வட்டாட்சியருக்கு ஆணை பிறப்பித்துள்ளார் . மீண்டும் சார் ஆட்சியரின்உத்தரவை கூட மதிக்காமல் வட்டாட்சியர் அலுவலகம் மெத்தனப்போக்கோடு செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலக ஊழியர்கள் ஓய்வு பெற்ற தலையாரிகளை தங்கள் அலுவலகத்தில் வைத்துக் கொண்டு அவர்கள் சொல்படி பொதுமக்களை நடக்கத் தூண்டுகின்றனர் மற்றும் பொதுமக்களை கண்டு கொள்வதே இல்லை என்ற நிலையில் இருந்து வருகின்றனர் இது போன்ற அதிகாரிகளால் தான் ஆட்சியாளர்களுக்கு பெருமளவில் கெட்டப்பெயர் ஏற்பட்டு வருகிறது. ஊழியர்கள் தங்கள் கடமையிலிருந்து தவறி விட்டு பழியை அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களின் சுமத்தி தப்பித்து விடுகின்றனர் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.