ஷ்யாம் நீயூஸ்
17.06.2023
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி ஊராட்;சி பகுதியாக இருந்து 2008ல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்பு புறநகர் பகுதியாக இருந்த பகுதியை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எந்த பகுதிக்கும் சாலை வசதி செய்து கொடுக்கப்படாத நிலை இருந்து வந்தது. அப்பகுதியை சேர்ந்த பலர் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்து வந்தனர். திமுக ஆட்சி அமைந்த பின்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன் பின் மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்று கொண்ட பின் அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி அடிப்படை பணிகளை முழுமையாக செய்து கொடுப்போம். எந்த பகுதிக்கு எந்த பணி முதலில் முக்கியம் என்பதை கணக்கெடுக்கப்பட்டு பள்ளி கல்லூரி இயங்கும் சாலை கோவில் தேவாலயம் மசூதி மருத்துவமனை இருக்கும் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் பாதாளசாக்கடை பணிகள் நிறைவு பெற்று தற்போது பிம்சி பள்ளி அருகே கால்வாய் பணியும், ஆசிரியர் காலணி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளையும், நிகிலேசன் நகர், தனசேகரன் 4 முதல் 6 வரை உள்ள தெருக்களில் ஆரம்பமாகப் போகும் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் முழுமையான கட்டமைப்பு பணிகளை செய்து, கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் எந்த முன்னெச்சரிக்கை பணிகளையும் மேற்கொள்ளாமல் கடமைக்கு இருந்து விட்டு சென்றன நாங்கள் மக்களின் மனநிலையை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் எல்லா பணிகளையும் மக்கள் நலன் கருதியே திட்டமிட்டு பணி செய்து வருகிறோம் மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காத அளவிற்கு புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டு புதியதார் சாலை பணிகளை நல்ல முறையில் செய்து கொடுத்தால் மக்கள் அனைவரும் பாராட்டுவார்கள் என்று சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் தளபதி கூறியுள்ளார். அவர் வழியில் வந்த நாங்கள் அதை முழுமையாக பின்பற்றுவோம். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது உதவி ஆணையர் சேகர், மாவட்ட திமுக பிரதிநிதி செல்வக்குமார், கவுன்சிலர் ஜாக்குலின் ஜெயா, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், அரசு சார்ந்து அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.