முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்தனர்.

 ஷ்யாம் நியூஸ் 29.03.2022 தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்தனர்.     தூத்துக்குடி முன்னாள் நகர் மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து 92வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோர் குரூஸ்பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.     நிகழ்ச்சியில் துணைமேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா,  மீனவரணி செயலாளர் அந்தோணிஸ்டாலின், துணைச்செயலாளர் ஜேசையா. சுற்றுசூழல் அணி செயலாளர் ஜெபசிங், இளைஞர் அணி செயலாளர் மதியழகன், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளரும் கவுன்சிலருமான பாலகுருசாமி,  தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மகளிர் அணிசெயலாளர் கஸ்தூரி தங்கம், மகளிர் தொ...

தூத்துக்குடியில் மீண்டும் கலவரத்தை தூண்ட நினைக்கும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு கண்காணிப்பாளரிடம் புகார்!

ஷ்யாம் நியூஸ் 29.03.2022 தூத்துக்குடியில் மீண்டும் கலவரத்தை தூண்ட நினைக்கும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு கண்காணிப்பாளரிடம் புகார்! தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது  நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது விசாரணை நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள்   பொதுமக்களிடம் ஆதார் எண் தாருங்கள் பணம் தருகிறோம் அரிசி தருகிறோம் மளிகை பொருட்கள் தருகிறோம் மீன்பிடி வலை தருகிறோம் வீடு கட்டித் தருகிறோம் மக்கள் குறை தீர்ப்பு நாளில் மனு கொடுக்க வந்தால் குறிப்பிட்ட தொகை தருகிறோம் என தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி வருவதோடு  மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை பெயரில் ஸ்டெர்லைட் ஆலை கைக்கூலிகள் செயல்பட்டு வருகின்றனர் மூடப்பட்ட ஆலை பெயரில் செயல்பட சட்டப்படி அனுமதி இல்லை என்றும்  ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி ...

திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்போன் திருடியவர் கைது - ரூபாய் 40,000/- மதிப்புள்ள செல்போன் பறிமுதல்.*

ஷ்யாம் நியூஸ் 25.03.2022 திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்போன் திருடியவர் கைது - ரூபாய் 40,000/- மதிப்புள்ள செல்போன் பறிமுதல். தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பகுதியைச் சேர்ந்த தண்டாயுதபாணி மகன் சங்கரநாராயணன் என்பவர் தற்போது சென்னை சோழிங்கநல்லூரில் வேலைபார்த்து வருகிறார். இவர் நேற்று (24.03.2022) திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வந்தவர் இரவு கோவில் வளாகத்திலேயே தங்கியிருந்துள்ளார். இன்று (25.03.2022) காலை எழுந்து பார்க்கும் போது தான் வைத்திருந்த செல்போனை காணவில்லை என்று சங்கரநாராயணன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேற்படி போலீசாரின் விசாரணையில் சங்கரநாராயணனின் செல்போனை திருடியது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், வடலிவிளை பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் சிங்கத்துரை (53) என்பவர் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கல்யாணசுந்தரம் வழக்குப்பதிவு செய்து மேற்படி எதிரி சிங்கதுரையை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 40,000/- மதிப்...

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றி வந்து செல்வதற்கான வழித்தடங்களை மேயர் ஜெகன்பெரியசாமி   ஏற்பாடு செய்து கொடுத்தார். 

 ஷ்யாம் நியூஸ் 23.03.2022 தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றி வந்து செல்வதற்கான வழித்தடங்களை மேயர் ஜெகன்பெரியசாமி   ஏற்பாடு செய்து கொடுத்தார்.  தூத்துக்குடி மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி தான் பொறுப்பேற்ற நாள்முதல் தினம்தோறும் மாநகர பகுதிகளையும், மாநகரில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை, சாலை அமைத்தல், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை துரிதமாக செய்து கொடுத்தும் வருகிறார்.  இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயிலில் இருந்து மருத்துவமனைக்கு உள்ளே ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதில் தொடர்ந்து பெரும் இடையூறுகள் நிலவி வந்தது.  இதுகுறித்தும், மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் இருச்சக்கர வாகனங்களால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவது குறித்தும், இதில் உரிய நடவடிக்கை எடுக்ககோரியும...

தூத்துக்குடியில் 148 பயனாளிகளுக்கு நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்ட சான்றிதழை மேயர் ஜெகன்பெரியசாமி வழங்கினார்.

 ஷ்யாம் நியூஸ் 22.03 .2022 தூத்துக்குடியில் 148 பயனாளிகளுக்கு நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்ட சான்றிதழை மேயர் ஜெகன்பெரியசாமி வழங்கினார். தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பணை சங்கத்தில் 148 பயனாளிகளுக்கு 57.94 லட்சத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைசச்ர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.9.2021 அன்று சட்டமன்ற பேரவை நிதி எண்: 110ன் கீழ் 40 கிராமுக்குட்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு பொதுநகைக்கடன்கள் கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகம் முழுவதும் பொதுநகைக்கடன் கூட்டுறவு சங்கங்களில் பெற்றவர்களுக்கு நகைக்கான அசல் வட்டி போன்றவை தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் பயனாளிகளுக்கு திரும்ப வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 148 பயனாளிகளுக்கு ரூ.57.94 லட்சத்தில் நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஈடுவைத்த நகைகளை திரும்ப ஓப்படைக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி...

திருவிக நகர் சக்திபீடத்தில் ஆன்மிககுரு பங்காரு அம்மா அவ‌தார பெருமங்கல விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஷ்யாம் நியூஸ் 22.03.2022  திருவிக நகர் சக்திபீடத்தில் ஆன்மிககுரு பங்காரு அம்மா அவ‌தார பெருமங்கல விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கல் தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் ஆன்மிககுரு பங்காரு அம்மா அவ‌தார பெருமங்கல விழாவை முன்னிட்டு ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி 3வது மைல் அருகே உள்ள திருவிக நகர் சக்திபீடத்தில் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் 82வது அவ‌தார பெருமங்கல விழா நடைபெற்றது. உலக சமாதனம் வேண்டியும், மழை வளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மாணவ, மாணவியர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து கல்வி அறிவு சிறக்கவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.  பூஜையை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு சக்திபீட வேள்விக்குழு பத்மாவதி முன்னிலையில் சக்திபீட பொருளாளர் அனிதா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மத்திய கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் கந்தசாமி தொடங்கி வைத்தார். விழாவில், ஆன்மிக இயக்க துணைத் தலைவர் பண்டார முருகன், பொருளாளர் கண்ணன், மகளிர்அணி பத...

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ராகு-கேது பெயர்ச்சி விழா

 ஷ்யாம் நியூஸ் 23.03.22 தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ராகு-கேது பெயர்ச்சி விழா தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்களின் வாழ்வில் கடன்தொல்லைகள் யாவும் முற்றிலுமாக தீரவேண்டி ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடந்தது. தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி&மஹா காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடத்தில் ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வாழ்வில் நோய்கள் இன்றி நலமாக வாழவேண்டியும், கடன்தொல்லைகள் யாவும் தீரவேண்டியும், தொழில்வளம் பெருகி செல்வம் கொழித்திடவும், கல்வி-செல்வம் பெருகிடவும், விவசாயம் செழித்திடவும் வேண்டி ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நவக்கிரகங்களுக்கு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் வெகு கோலாகலமாக நடைபெற்றது. யாக வழிபாடுகளை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், பக்தர்கள், ஆன்மிக அன்பர்கள், மகளிர் வழிபாட்டுக்குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்...

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணியை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

 ஷ்யாம் நியூஸ் 22.03.2022 தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணியை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.      தூத்துக்குடி கடந்த திமுக ஆட்சியின் போது அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி 2008 ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி நகராட்சியை தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக தரம் உயர்த்தி தொடங்கி வைத்தார். அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை அறிமுகம் செய்து மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் நிதி ஓதுக்கீடு செய்தார். கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாநகராட்சி 31வது வார்டுக்குட்பட்ட அண்ணாநகர் 4ம் தெருவிலிருந்து 12ம் தெரு வரை பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதை மேயர் ஜெகன் பெரியசாமி நடந்தே சென்று பணிகளை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.     இந்த ஆய்வின் போது அப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் நல்ல முறையில் பணி செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கவுன்சிலர் கனகராஜ் உள்பட பலர் உடனிருந்த...

சைபர் குற்றங்களை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க தேசிய சைபர் பாதுகாப்பு இயக்குனர் வலியுறுத்தல்!

 ஷ்யாம் நியூஸ் 19.03.2022 சைபர் குற்றங்களை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க தேசிய சைபர் பாதுகாப்பு இயக்குனர் வலியுறுத்தல்! சைபர் குற்றங்களுக்கு என கோர்ட்டுகள் உருவாக்கினால் இவ்வகை குற்றங்களுக்கு உடனே தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும் என தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நடந்த விழாவில் தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவன இயக்குனர் காளிராஜ் பேசினார். வ உ சி கல்லூரியில் நடந்த தேசிய சைபர் கிரைம் பயிற்சி மையம் துவக்க விழாவிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். வ உ சி சிதம்பரம் கல்வி நிறுவன செயலாளர் ஏபிசிவி சொக்கலிங்கம் தலைமை உரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் வீரபாகு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எஸ்பி பாலாஜி சரவணன் பேசுகையில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை அதிக வருமானம், புகழ், அழகு போன்ற அம்சங்கள் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் சந்தோஷமான வாழ்க்கை அமையும் என்பது இல்லை உண்மையில் அன்புடன் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்றார். டெல்லியில் உள்ள தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவன இயக்குனர் காளிராஜ் பேசுகையில் நல்ல குருவால் மட்டுமே சிறந்த தலைவர்களை உரு...

தூத்துக்குடியில் தொழில்வளம் பெருக வர்த்தக தொழிற்சங்கம்துணை நிற்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்

 ஷ்யாம் நியூஸ் 19.03.202. தூத்துக்குடியில் தொழில்வளம் பெருக வர்த்தக தொழிற்சங்கம்துணை நிற்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள். தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநகராட்சி மேயர் துணை மேயர் மாமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழா தெற்கு ராஜா தெருவில் உள்ள சங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு தலைவர் ஜோ.பிரகாஷ் தலைமை வகித்தார்.       நிகழ்ச்சி ஏற்புரையில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி பேசுகையில் தமிழகத்தில் திமுக ஆட்சிதான் தொழில் வளம் பெருகுவதற்கு துணையாக இருக்கும் அரசு. சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச பர்னிச்சர் பூங்கா அமைவதற்கு அடிக்கல் நாட்டி பல்வேறு புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.       அதே போல் திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு தான் தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிடவும், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க புதிய தொழில் கொள்கைகள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வெளிநாட...

ஆறு வயது சிறுமி இரண்டு முறை உலக சாதனை!           

 ஷ்யாம் நியூஸ் 18.03.2022 ஆறு வயது சிறுமி இரண்டு முறை உலக சாதனைபடைத்து அசத்தியுள்ளார்                மதுரை அச்சம்பத்தில் இயங்கிவரும் மது இன்ஸ்டிடூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் இன் நிறுவனர் மரு.வெ.பரத் அவர்களின் மகள் ப.மதுவிந்த்ரா மதுரை நாகமலை புதுக்கோட்டையில் இயங்கி வரும்  SBOA CBSE பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் இவருடைய தந்தை பயிற்சி செய்து வரும் எலக்ட்ரோஹோமியோபதி மருத்துவமுறையை பற்றி மிக எளிதாக 4.52 நிமிடங்களில் வகுப்புகள் எடுத்து "எக்ஸ்ட்ராடினரி கிட் " என்ற  புதிய  உலகசாதனையை படைத்துள்ளார்.இவருடைய உலக சாதனையை வேல்ட் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்,வேல்ட் ரிக்காட்ஸ் இந்தியா,யூனிக் வேல்ட் ரிக்கார்ட்ஸ்,ஸ்டேட்  அப்ரூவ்டு வேல்ட் ரிக்காட்ஸ்,கிரேட் வின்னர்ஸ் வேல்ட்ரிக்கார்ட்ஸ்,மேஜிக் புக் ஆப் வேல்ட் ரிக்கார்ட்ஸ்,கிங்டம் புக் ஆப் வேல்ட் ரிக்கார்ட்ஸ் ஆகியவை இவருடைய உலகசாதனையை பதிவு செய்துள்ளது. *இவருடைய உலக சாதனையான 4.45 நிமிடங்களில் வகுப்புகள் எடுத்ததை இரண்டே நாட்களில் இவரே முறியடித்து எலக்ட்ரோஹோமியோபதி மருத்துவமுறையை 2...

 தூத்துக்குடி மாநகராட்சி பகுதி பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்

ஷ்யாம் நியூஸ் 17.03.2022  தூத்துக்குடி மாநகராட்சி பகுதி பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்      தூத்துக்குடி வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடி மாநகர பகுதி மக்களுக்கு குழாய் மூலம் குடிதண்ணீர் கொண்டு வரும் குழாயில் நான்காம் கேட் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சரி செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த குடிநீர் குழாய் மூலம் குடிதண்ணீர் செல்லும் புதிய பேருந்து நிலையம் கலைஞர் நீர்தேக்க தொட்டி, ஆர்எஸ்பிஆர், ஆதிபராசக்திநகர், விஎம்எஸ்நகர், சுப்பையா பார்க், ரூரல், முருகன் தியேட்டர் அருகில், திரேஸ்புரம், 2ம்கேட் விவிடி பூங்கா, ஆகிய 8 நீர்தேக்க தொட்டிகளுக்கு இந்த குழாய் மூலம் செல்லும் குடிதண்ணீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் முழுமையாக பழுது நீக்கப்பட்டு வழக்கம் போல் குடிதண்ணீர் நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழக்கம் போல் குடிதண்ணீர் சப்ளை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேயர் முதல் கவுன்சிலர்கள் வரையிலான அனைவரது தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

 ஷ்யாம் நியூஸ் 14.03.2022 பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேயர் முதல் கவுன்சிலர்கள் வரையிலான அனைவரது தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த எண்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர்:ஆர்.பிரியா 044-25619300, 044-25384438 சென்னை மாநகராட்சி துணை மேயர்: வார்டு எண்: 169 மகேஷ்குமார் 044-25619210, 044-25382979 சென்னை கவுன்சிலர்கள்: வார்டு எண்: 1 சிவக்குமார் 9445727777 வார்டு எண்: 2 கோமதி சந்தோஷ்குமார் 8056161161 வார்டு எண்: 3 தமிழரசன் 9884303000 வார்டு எண்: 4 ஜெயராமன் 9840823517 வார்டு எண்: 5 சொக்கலிங்கம் 9444203333 வார்டு எண்: 6 சாமுவேல் திரவியம் 9841233335 வார்டு எண்: 7 கார்த்திக் 9962541122 வார்டு எண்: 8 ராஜகுமாரி 7401117889 வார்டு எண்: 9 உமா சரவணன் 7200905993 வார்டு எண்: 10 தனியரசு 9941441508 வார்டு எண்: 11 சரண்யா 9884279999 வார்டு எண்: 12 கவி கணேசன் 9884630696 வார்டு எண்: 13...

தூத்துக்குடியில் 100 ஆண்டுகளுக்கு மேலான கோவிலை இடிக்க மதுரை உயர்நீதிமன்றம் தடை!

 ஷ்யாம் நீயூஸ் 10.03.2022 தூத்துக்குடியில் 100 ஆண்டுகளுக்கு மேலான கோவிலை இடிக்க மதுரை உயர்நீதிமன்றம் தடை!     தூத்துக்குடி 100 ஆண்டுகளுக்கு மேலான கோவிலை இடிக்க மதுரை உயர்நீதிமன்றம் தடை விதி;த்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த கதிரேசமணி சார்பில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில் தூத்துக்குடியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழைமை வாய்ந்த பிரதிபெற்ற வரதவிநாயகர் கோவில் இருந்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இரயில் நிலையம் தூத்துக்குடி மாவட்டம் வளர்ச்சியடைந்த பிறகு போக்குவரத்து நெரிசல் மற்றும் கீழ்பாலம் மேம்பாலம் அமைப்பதாலும் கடல்நீர் மற்றும் மழைநீர் சாக்கடை கால்வாய் நீர்கள் உட்புகும் அபாயமும் மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் மீளவிட்டான் இரயில் நிலையம் அருகில் உள்ளதாலும் விமானநிலையம் மீளவிட்டான் அருகில் இருப்பதாலும் தூத்துக்குடி மாநகர் புதுக்கோட்டை வரை பரந்து விரிந்து விட்டதால் மாவட்டத்தின் எந்த பகுதியிலிருந்து வந்தாலும் இரயில் நிலையத்திற்...

மாப்பிள்ளையூரணியில் மகளிர் தின விழா நடைபெற்றது.

 ஷ்யாம் நீயூஸ் 09.03.2022 மாப்பிள்ளையூரணியில் மகளிர் தின விழா நடைபெற்றது.   தூத்துக்குடி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாப்பிள்ளையூரணியில் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு திட்ட அலுவலர் வீரபுத்திரன், தமிழ்நாடு கடலோர வாழ்வாதார கண்காணிப்பு அலுவலர் ரூபன், ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர் முத்தமிழ் செல்வன், ஆகியோர் தலைமை வகித்தனர். ஓருங்கிணைந்த சேவை மைய பதிவாளர் உமாதேவி, இந்தியன் வங்கி மேலாளர் சுதாகர், கார்த்திக்கேயன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முகம்மது சாதீக், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.        மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியகுழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.      விழாவில் மகளிர் குழு இளம் வல்லுநர் புஷ்பராஜ், வட்டார அலுவலர் மகேஸ்வரி, வட்டார திட்ட செயலர் மகேஷ்வரன், டிஎன்ஆர்டிபி ஓருங்கிணைப்பாளர் செந்தில்வேல் ஆறுமுகம், செயல் அலுவலர் ராதா, வட்டார ம...

தூத்துக்குடி அருகே நடு சாமத்தில் காவல் தெய்வத்திற்கு பூஜை! காட்டுக்குள் ஆட்டுக்கறி அன்னதானம் !

 ஷ்யாம் நீயூஸ் 09.03.2022 தூத்துக்குடி அருகே நடு சாமத்தில் காவல் தெய்வத்திற்கு பூஜை! காட்டுக்குள் ஆட்டுக்கறி அன்னதானம் ! தூத்துக்குடி அத்திமரப்பட்டி காலான்கரை கிராம  சாலையில் உள்ள  விவசாயிகளின் காவல் தெய்வமாக இருக்கும் வீரி அம்மனுக்கு  20 வது ஆண்டாக நேற்று  அத்திமரபட்டி விவசாயிகள்  நடத்திய  நள்ளிரவு பூஜை நடைபெற்றது.பின்பு இரவு 1மணியளவில் ஆட்டு கறியுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.  இதில் அத்திமரப்பட்டி, காலாங்கரை, வீர நாயகன் தட்டு ,மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாய பொதுமக்கள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் காவல் தெய்வமாக வழிபட்டு வரும்  வீரியம்மனுக்கு  ஆண்டுதோறும் நள்ளிரவில் பாரம்பரிய பூஜை வழிபாடு நடத்துவதோடு அன்னதானமும் வழங்கி அப்பகுதி விவசாயிகள் சிறப்பித்து வருகின்றனர். இதில் 3ம் மடை விவசாய சங்க தலைவர் ஆட்சி முத்துதங்கம், மண்டல உறுப்பினர் செல்வமணி,விவசாயி முருகன்,2ம் மடை தலைவர் திருமால்,விவசாயி கோவில்மணி,விவசாயி பொண்ணுதுறை,காலான்கரை விவசாயி இருளப்பன் மற்றும் விவசாயிகள் பலர் ஒன்றினைந்து விழாவை நடத்தினர்.

திமுக மகளிரணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கனிமொழி எம்.பி. தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

 ஷ்யாம் நீயூஸ் 08.03.2022 தூத்துக்குடி  : திமுக மகளிரணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கனிமொழி எம்.பி. தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். அதன் முன்னோட்டமாக திமுக மகளிரணிக்கு என தனி இணையதளம் ஒன்றையும் உருவாக்கி அதனை ஸ்டாலினை அழைத்து தொடங்கி வைக்கவிருக்கிறார். திமுக மகளிரணி திமுகவில் உள்ள சார்பு அணிகளில் இளைஞரணியும், மகளிரணியும் மட்டுமே பிரதான இடத்தில் இருந்து வருகின்றன. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நேற்று தொடங்கியதல்ல, ஆரம்பகாலம் தொட்டே திமுகவில் இவ்விரு அணிகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. இந்தச் சூழலில் இளம்பெண்களை புதிய உறுப்பினர்களாக இணைக்கும் வகையில் திமுக மகளிரணிக்கு புதிதாக தனி இணையதளம் ஒன்றை வடிவமைத்திருக்கிறார் கனிமொழி எம்.பி. தனி இணையதளம் இந்த இணையதளம் மூலம் திமுக மகளிரணியில் இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் உறுப்பினராக சேரமுடியும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் எல்லோரும் நம்முடன் என்ற முழக்கத்துடன் திமுகவில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் உறுப்பினர் சேர்ப்பை போல் இப்போது கனிமொழி இளம்பெண்களை கட்சியில் இணைக்க புதிய வழிமுறையை கையிலெட...

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்

 ஷ்யாம் நீயூஸ் 08.03.2022 தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்! தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். தூத்துக்குடி மாநகர பகுதியில் செவ்வாய் அதிகாலை பெய்த மழையால் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதுகுறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பொதுமக்கள் வாட்ச்அப் மூலம் குறைகளை தெரிவித்தனர். இதையடுத்து தூத்துக்குடி 40-வது வார்டுக்கு உட்பட்ட செயின் மீட்டர் கோவில் தெரு, மரக்குடி தெரு, தெற்கு காட்டன் ரோடு ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு மாநகராட்சி லாரியின் மூலம் தேங்கிய தண்ணீரை அகற்றுவதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டது மட்டுமின்றி அப்பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் உள்ள கழிவு குப்பைகள் மற்றும் தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்தி தடையின்றி கழிவுநீர் செல்வதற்கு உத்தரவிட்டார். மாநகராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொண்டது. மேயருடன் கிழக்கு மண்டல சுகாதார ஆய்வாளர் பாக்கிய ஸ்டாலின், மாநகராட்சி நிர்வாகத்தை சேர்ந்த பாலு, தேன்ராஜ், செந்தில், மாமன்ற உறுப்பினர் ரிக்ட்டா, ஆர்தர் மச்சாது, வட்டச்செயலாளர் ட...

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மேலசண்முகபுரம் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

 ஷ்யாம் நீயூஸ் 08.03.2022 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி  மேலசண்முகபுரம் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மேலசண்முகபுரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், கும்ப பூஜை (108) அஷ்டோத்தர கலச பூஜை, கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம் சுதர்சன ஹோமம், ஐஸ்வர்ய ஹோமம், சக்தி ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி 108 கலசாபிஷேகம் கண்ணன் பட்டர் தலைமையில் ஓமகுண்டம் சிறப்பு அர்ச்சனை பூஜைகள், மந்திரங்கள் கூறி நடைபெற்றது.  அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெற்று அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து நல்ல வளமான தொழில் அனைவருக்கும் அமையவேண்டும். கொரோனா உள்ளிட்ட நோய் தொற்றுகளிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்றி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என வேண்டி மகளிர் தினத்தையொட்டி திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சித்திரை விஜயன், பொருளாளர் மு...

மாப்பிள்ளையூரணியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் இனிப்பு வழங்கினார்.

  ஷ்யாம் நீயூஸ் 04.03.2022 மாப்பிள்ளையூரணியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் இனிப்பு வழங்கினார்.       தூத்துக்குடி திமுக தலைவர் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஆலோசனை படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், பாரதிராஜா, தங்க மாரிமுத்து, கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், மற்றும் அங்காளஈஸ்வரி, கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி டேக்வாண்டோ ராமலிங்கபாரதிக்கு பாராட்டு

 ஷ்யாம் நீயூஸ் 03.03.2022 தூத்துக்குடி டேக்வாண்டோ ராமலிங்கபாரதிக்கு பாராட்டு!   தூத்துக்குடி டேக்வாண்டோ அமைப்பில் பொறுப்பு வகித்து பல்வேறு விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து மாவட்ட மாநில தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பல பதக்கங்களை பெற்று தூத்துக்குடிக்கு பெருமை சேர்த்த ராமலிங்கபாரதி மகாராஷ்டிரா மாநிலம் அவுங்கரபாத்;தில் நடைபெற்ற இந்திய டேக்வாண்டோ அணிக்கான தேர்வு போட்டி இந்தியா டேக்வாண்டோ சங்கம் நடத்தியது.      இத்தேர்வு போட்டியில் தமிழகத்தின் சார்பாக தூத்துக்குடியை சேர்ந்த ராமலிங்கபாரதி நடுவராக கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய அவருக்கு இந்தியா டேக்வாண்டோ தலைவர் நாம்தேவ் மற்றும் நடுவர் சேர்மன் திருமால் ஆகியோர் ராமலிங்கபாரதி செயல்பாடுகளை பாராட்டினார்கள்.       இதனையடுத்து இந்தியா டேக்வாண்டோ நடுவர் ராமலிங்கபாரதிக்கு தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்கள்.