முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளர் லஞ்சம் கேட்டதால் மாற்று திறனாளி தொழிலாளி ஆட்சியர் அலுவலக வாசலில் தீ குளிக்க முயற்சி !

ஷ்யாம் நியூஸ்  26.07.2021 தூத்துக்குடி  டாஸ்மாக் மேலாளர் லஞ்சம் கேட்டதால் மாற்று திறனாளி தொழிலாளி ஆட்சியர் அலுவலக வாசலில் தீ குளிக்க முயற்சி ! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்  கடை எண் 10138 ல் விற்பனையாளராக உள்ளவர்   பி .நாகராஜன்  மாற்று திறனாளியான  இவர் 05.10.2020  ல் அக்கடைக்கு பணியமர்த்த பட்டுள்ளார் .இந்த நிலையில் கடையின் மேற்பார்வையாளர் சரவணன் இவரது ஊனத்தை ஜாதியையும்  காரணம் காட்டி இழிவாக பேசி பணி  செய்ய விடமால் சுமார் ஒரு வருடமாக தடுத்துள்ளார் .இதுகுறித்து தூத்துக்குடி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஐயப்பனிடம் மற்றும் உதவி மேலாளர் இருவரிடமும்  பலமுறை புகார் தெவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம் .மற்றும் மதுரை மண்டல மேலாளர்  ஆணை பிறப்பித்தும் தூத்துக்குடி மாவட்ட மேலாளர் ஐயப்பன் கடை மாறுதல் அனுமதி கொடுக்காமல் லஞ்சம் வேண்டும் என்பதற்காக மேற்பார்வையாளர் சரவணனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளாராம்.  இதனால் மனவேதனை அடைந்த நாகராஜன்  நேற்று (26.07.2021) ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார் .அப்போது...

புளுக்கள்கூட மிதித்தால் நெளியும் ஊடகம் அதைவிட கேவலமானதா?மூத்த பத்திரிகையாளர் மணி வேதனை!

 ஷ்யாம் நீயூஸ்  18.07.2021 புளுக்கள்கூட மிதித்தால் நெளியும் ஊடகம் அதைவிட கேவலமானதா?மூத்த பத்திரிகையாளர் மணி வேதனை! சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்னும் 6 மாதத்திற்குள் தமிழக மீடியா ஊடகங்கள் நம் கண்ரோலுக்குள் வந்தும்விடும் என பொது வெளியில் பேசியது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பாஜக மாநில தலைவர் எல் முருகன்  தோல்வியை தழுவினார் தற்போது எல் முருகனை மத்திய பாஜக அரசு ஊடகங்களை கண்காணிக்க உள்ள துறைக்கு இணை அமைச்சராகப் பதவி கொடுத்து உயர்த்தியுள்ளது.இந்த நிலையில் தமிழக மாநில பாஜக தலைவராக கடந்த தேர்தலில் போட்டியிட்டு  படுதோல்வி அடைந்த அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.  இந்த நிலையில் அண்ணாமலை சமீபத்தில் இன்னும் 6 மாதத்திற்குள் தமிழக மீடியா ஊடகங்கள் நம் கட்டுபாட்டுக்குள் வந்துவிடும் என பேசியிருந்தார். இவரது பேச்சை எந்த ஊடகங்கள் நிறுவன தலைவர்கள் ஒரு கண்டனம் கூட இதுவரை தெரிவித்ததாக தெரியவில்லை பிரஸ் கவுன்சிலும் கண்டு கொள்ளவில்லையே என்பது வேதனை அளிக்கிறது. புழுக்கள் கூட மிதித்தால் நெளியும் ஊடகம் சுதந்திரத்தை இவ...

அமைச்சர் கீதாஜீவனிடம் கொரானா நிதி வழங்கிய தூத்துக்குடி சிறுவன்.!

ஷ்யாம் நீயூஸ்  17.07.2021  அமைச்சர் கீதாஜீவனிடம் கொரானா நிதி வழங்கிய தூத்துக்குடி சிறுவன்.! தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த சேவை மையத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார் .அப்போது அங்கு வந்த தூத்துக்குடியில்  ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சம்சன் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அமைச்சர் கீதாஜீவனிடம் வழங்கினார். நிதி வழங்கிய சிறுவனுக்கு அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ்  இருவரும் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் டி எஸ் எப் கிப்சன் மனுதாக்கல் !

 ஷ்யாம் நீயூஸ்  16.0702021 தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் டி எஸ் எப் கிப்சன் மனுதாக்கல்! தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. டி எஸ் எப் கிப்சன் இன்று திருமண்டல பெருமன்ற உறுப்பினர்க்கு தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் சேகரத்தில் மனுதாக்கல் செய்தார். இதன் மூலம் தூத்துக்குடி திருமண்டல தேர்தல் சூடுபிடித்துள்ளது.இரண்டு முறை பதவியில் இருந்ததால் லே செயலாளர் பதவிக்கு  எஸ் டி கே ராஜன் இந்த முறை திருமண்டல தேர்தல்  விதிமுறைகள் படி போட்டியிட முடியாததால் அவரது சார்பாக ஜெபசந்திரன் போட்டியிடுகிறார். அடுத்து அதே சமயத்தில் டி எஸ் எப் அணி சார்பாக லே செயலாளர் பதவிக்கு கிப்சன்  போட்டியிடுவார் என்பதால்   நாசரேத் திருமண்டல  தேர்தல்  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது.இது வரை நடந்த தேர்தலில் இளம் வயது வேட்பாளர் கிப்சன் என்பதால் இவரது வரவு நாசரேத் திருமண்டல கிருஸ்தவ மக்களிடம் மிகுந்த  எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது .

தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கையை ஏற்று புறக்காவல் நிலையம் திறந்து வைத்தார் கலெக்டர் செந்தில்ராஜ் !

 தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கையை ஏற்று புறக்காவல் நிலையம் திறந்து வைத்தார் கலெக்டர் செந்தில்ராஜ் ! பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் திறக்கவேண்டும்  என்று நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது .தற்போது  மீனவர் சங்கம் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  தீர்மான நகல்களை தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இருவரிடமும் மீனவர் சங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது கோரிக்கை ஏற்று கொண்ட கலெக்டர்  மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  இருவரும் இன்று தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையத்தை தொடக்கி வைத்தனர் .அப்போது கலெக்டர் பேசும் போது இந்த புறக்காவல் நிலையம்  மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல் மீன்பிடிக்க உதவும் எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படால் இருக்க உதவியாய் இருக்கும் என்றும்  மட்டுமல்லாது பிடித்துவரும் மீன்களை நல்லவிலை வரும் பொது விற்பதற்காக விரைவில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட உள்ளது என்றும்  .தூத்துக...

காமராசர் 119வது பிறந்தநாள் விழா!ஊர்வசி அமிர்தராஜ் எம் எல் ஏ மலர்தூவி மரியாதை!

 ஷ் யாம் நீயூஸ்  15.07.2021 காமராசர் 119வது பிறந்தநாள் விழா!ஊர்வசி அமிர்தராஜ் எம் எல் ஏ மலர்தூவி  மரியாதை!  தமிழக முன்னாள்  முதல்வர் காமராசர் 119 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடபட்டு வருகிறது.  தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் அமைக்கப்பட்ட காமராசர் திருவுருவப்படத்திற்க்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் எம் எல் ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் பொதுமக்களுக்கு  இனிப்புகள் வழங்கி ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினார். பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு பெண்சில்கள் வழங்கினார். இதில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஜெயக்கொடி,  டேவிட் பிரபாகரன்,பால்துரை, தர்மராஜன் ,ராஜப்பா மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல். லே செயலாளர் பதவிக்கு டி எஸ் எப் கிப்சன் போட்டி!

 ஷ்யாம் நீயூஸ்  13.07.2021 தூத்துக்குடி நாசரேத் திருமண்டல  தேர்தல். லே செயலாளர் பதவிக்கு டி எஸ் எப் கிப்சன் போட்டி! தூத்துக்குடியில் நாசரேத் திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது.இந்த நிலையில் தற்போதய பதவியில்  இருக்கும் அணியினர் அதிகாரத்தை பயன்படுத்தி எதிரணியின் முக்கிய பிரமுகர்கள் ஓட்டுகளை செல்லாதவை என அறிவித்ததும் பின்பு அவர்கள் ஓட்டுகளை செல்லும் ஓட்டுகள் என்றும் அறிவித்தும் ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாக்கினர் என்று வாக்காளர்கள்   குற்றசாட்டு சுமத்தி வந்த வேலையில் தற்போது லே செயலாளர் பதவிக்கு எஸ் டி கே ராஜன் சார்பாக ஜெபசந்திரன் அறிவிக்கபட்ட நிலையில். எஸ் டி கே ராஜன் அணியை எதிர்த்து  டி எஸ் எப் கிப்சன்  லே செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இது சம்மந்தமாக டி எஸ் எப் சிப்சன் அலுவலகத்தில் அலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில்  மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் எஸ் டி ஆர் பொன்சீலன் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர் . நாசரேத் திருமண்டல தேர்தலில் லே செயலாளர் பதவிக்கு போட்டியிட இருக்கும் டி எஸ் எப் கிப்சன் பெயர் ஒரு சில தினங்களில்...

தூத்துக்குடியில் 20 கோடியில் புது தொழிற்சாலை ! ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு!

ஷ்யாம் நீயூஸ் 09.07.2021  தூத்துக்குடியில் 20 கோடியில் புது தொழிற்சாலை ! ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு! தூத்துக்குடியில் தொழிற்சாலை தொடங்க கோயம்புத்தூர் மற்றும்  பாலக்காடு பகுதியில் நூற்பாலைகளை இயக்கி வரும் தனியார் நிறுவனம் விருப்பம் தெரிவித்துஉள்ளது. புதிய  தொழிற்சாலையை தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதியில் தொடங்கவுள்ளன. இது சம்மந்தமாக தூத்துக்குடி ஆட்சியர் மருத்துவர் செந்தில் ராஜூடம் நிறுவனம் தலைவரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வைகோவின் மகன் துரை வையாபுரியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.  20 கோடி மதிப்பில் தொடங்கபட உள்ள நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு அதிகளவு நிரந்தர  வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது .தூத்துக்குடி வளர்ச்சிக்கு இது ஒரு மைல் கல்லாக அமைய உள்ளதால் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் தூத்துக்குடியை சார்ந்த தமிழக அமைச்சர்கள் கீதாஜீவன்,அனிதாராதாகிருஷ்ணன் அகியோரும் வரேவற்றுள்ளனர்.இந்த தொழிற்சாலை தூத்துக்குடியில் தொழில் தொடங்க அழைப்...

கல்வி தந்தை ஊர்வசி டி செல்வராஜ் மறைந்த 12 வது நினைவு தினம் அனுசரிப்பு !

கல்வி தந்தை  ஊர்வசி டி செல்வராஜ் மறைந்த 12 வது நினைவு தினம் அனுசரிப்பு ! கல்வி தந்தை  ஊர்வசி டி செல்வராஜ் மறைந்த 12 வது நினைவு தினம் 5.07.2021 அனுசரிக்கப்பட்டது . ஊர்வசி டி செல்வராஜின்   திருஉருவ படத்திற்கு கல்வி தந்தை  ஊர்வசி டி செல்வராஜ்  பேரவை செயலாளர் ஆடிட்டர் சிவ் ராஜ் மோகன்  மலர்தூவி மரியாதை செலுத்தினார் பின்னர்  பேரவை சார்பாக தூத்துக்குடியில் உள்ள மெர்சி  பிளைண்ட் ஹோம் உள்ள 20 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது  .இதில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஜெயக்கொடி,  டேவிட் பிரபாகரன்,பால்துரை, தர்மராஜன் ,ராஜப்பா மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .

தூத்துக்குடியில் கலப்பட டீசல் விற்பனை படு ஜோர் சமூக ஆர்வலர் வேதனை!

 ஷ்யாம் நீயூஸ்  04.07.2021 தூத்துக்குடியில் கலப்பட டீசல் விற்பனை படு ஜோர் சமூக ஆர்வலர் வேதனை!  தூத்துக்குடியில்  கலப்பட டீசல் விற்பனை பல இடங்களில் முக்கிய புள்ளிகள்  செய்வதாக குற்றசாற்று எழுந்துள்ளது .  பெட்ரோல் டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. இதனை பயன்படுத்தி   சில முக்கிய பிரமுகர்கள்  தூத்துக்குடி யில் ருரல் பகுதிகளில் லாரிகளுக்கு  மார்கெட் விலையை விட குறைவான விலையில்  கலப்பட டீசல் விற்பனை செய்கின்றனர்   இதனால்  அரசுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மற்றும் கடலோர சாலையில் உள்ள பல்க் உரிமையாளருக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கலப்பட டீசல் மூலம் இயக்கபடும்  லாரிகள் குறிப்பிட்ட நாளுக்கு பின் எஞ்சின் பழுதடைந்து லாரிகள் உரிமையாளருக்கு பெரும் செலவை ஏற்படுத்தி வருகிறது இதை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி சமூக ஆர்வலர்  வழக்கறிஞர் சிவராஜ் கோரிக்கை வைத்துள்ளனர். கள்ளசந்தையில் விற்பனை செய்யப்படும் கலப்பட டீசல் மூலம் பல கோடி வர்த்தகம்...