முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நவ.27ல் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்

ஷ்யாம் நீயூஸ் 21.11.25 நவ.27ல் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் வருகிற 27-ஆம் தேதி (வியாழக்கிழமை) வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது இதுகுறித்து நெல்லை வருங்கால வைப்புநிதி ஆணையாளர்-1 சிவசண்முகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில், ‘வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0’ என்ற குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் நேரு நகரில் உள்ள நேரு நர்சிங் கல்லூரியிலும், தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி எஸ்.வி.நகரில் உள்ள எஸ்.வீராசாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள அன்னம்மாள் மகளிா் கல்வியியல் கல்லூரியிலும் நடக்கிறது. இதில், வருங்கால வைப்புநிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்ந்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழில் அதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழில் ந...

ஆளுநர்கள் காலவரையறையின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்க முடியாது-உச்ச நீதிமன்றம்

 SHYAM NEWS 20.11.2025 ஆளுநர்கள் காலவரையறையின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்க முடியாது-உச்ச நீதிமன்றம்  மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கோ, ஆளுநருக்கோ காலக்கெடுவை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் ஆளுநர்கள் காலவரையறையின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்றும், அப்படி செய்தால் கட்டுப்படுத்தப்பட்ட/ குறுகிய (limited) நீதிமன்ற மறு ஆய்வு செய்யப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்காவிட்டால், மசோதாக்கள் சட்டமாகிவிடும் என்று ஏப்ரல் மாதம் வழங்கிய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியது அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவய் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் செயல்பட காலக்கெடு விதிப்பது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டிருந்த நிலையில், இந்த தீர்ப்பை இன்று (நவ. 20) உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. உச்ச நீ...

மாற்றுத்திறனாளி கிாிக்கெட் வீரா்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசு வழங்கினாா்.

  ஷ்யாம் நீயூஸ் 20.11.2025 மாற்றுத்திறனாளி கிாிக்கெட் வீரா்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசு வழங்கினாா்.     தூத்துக்குடி உலக மாற்றுதிறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு உலகின் முதலாவது உள்ளரங்கு ப்ரான்ச்சைஸ் சிட்டிங் கிரிக்கெட் டோர்னமென்ட் போட்டியை தூத்துக்குடி கோமதிபாய் காலணியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தமிழக மாற்று திறனாளிகளுக்கு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சிறந்த சிட்டிங் கிரிக்கெட் வீரர்கள் எட்டு அணிகளாக ஏலத்தில்  தேர்ந்தெடுக்கப் பட்டு சம பலத்துடன் மோதினர். இது உலகின் முதன்முறையாகும்.      இது ட்ரயம்ப் புக் ஆப் வல்ட் ாிக்காட்ஸ் நிறுவனத்தாரால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனை சான்றிதழ் வழங்கினார்.அமைச்சர் கீதாஜீவன் வழங்கி பேசுகையில் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் விளையாட்டு துறையை பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக அளவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு வி...

அரசின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? கொடிகட்டி பறக்கும் ஊழல்!

 ஷ்யாம் நீயூஸ் 19.11.25 அரசின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? கொடிகட்டி பறக்கும் ஊழல்! கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்பது திருக்குறள். இதன் பொருள்ருள், கற்க வேண்டிய நூல்களை எந்தக் குறையும் இல்லாமல் கற்க வேண்டும், அப்படி கற்ற பிறகு, அந்த கல்விக்குத் தகுந்தபடி வாழ வேண்டும் என்பதாகும்.  ஆனால் இன்று  அப்படி இல்லை அத்தி பூத்தாற் போல் ஒரு சிலரை தவிர ஐஏஎஸ் போன்ற உயர் படிப்பு படித்து பணிக்கு வந்தாலும்  குறுகிய காலத்தில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதுதான் நோக்கமாக பலருக்கு உள்ளது. தூத்துக்குடி கூடுதல் ஆட்சியராக (பொறுப்பு) டி ஆர் டி ஏ ஐஸ்வர்யா IAS பணிபுரிந்து வருகிறார். இவர் துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது இதை தடுத்து நிறுத்த வேண்டிய இவர் தான் பணியில் சிறந்ததாக பணிபுரிவதாக படம் எடுத்து சமூக வலைதளங்கள் பதிவிட்டு தன்னை நேர்மையானவர் என்று காட்டிக் கொண்டு வருகிறார். ஆனால் இவர் கீழ் உள்ள துறையான ஊராட்சி ஒன்றியம் பஞ்சாயத்து என அனைத்து துறைகளிலும் தற்போது மலை போல் ஊழல் மலிந்து ஊழலுக்கே மதிப்பில்லாமல் போய்க் கொ...

தூத்துக்குடி 3 டாக்டர்கள் விபத்தில் பலி மேலும் 2 டாக்டர்கள் படுகாயம் .

ஷ்யாம் நீயூஸ் 19.11.2025   தூத்துக்குடி 3 டாக்டர்கள் விபத்தில் பலி மேலும் 2 டாக்டர்கள் படுகாயம் .  கோயம்புத்தூர், PN புதூர் சாஸ்திரி 1வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் சாரூபன் (23), புதுக்கோட்டை பரிசுத்தம்மன் மகன் ராகுல் ஜெபஸ்டியான் (23), திருப்பத்தூர் மந்தவெளி குறும்பேறியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முகிலன் (23), தூத்துக்குடி தெர்மல் நகர் ரவிக்குமார் மகன் கிறிஸ்டிகுமார் (23) மற்றும் சரண் (23) ஆகிய 5பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் 5 பயிற்சி டாக்டர்களும் காரில் புதிய துறைமுகம் கடற்கரைக்கு சென்றனர். காரை சாருபன் ஒட்டி சென்றுள்ளார். கார் பீச் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, பலத்த மழை பெய்ததால் ரோடு சரியாக தெரியாததால் கார் நிலை தடுமாறி அருகிலுள்ள வேப்ப மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. 5பேரும் காருக்குள் சிக்கி கொண்டனர்  இது குறித்து அந்தப் பகுதியில் சென்ற மீனவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் உடனட...

மழைகாலத்தையொட்டி தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் உறுப்பினர்களுக்கு குடை வழங்கப்பட்டது.

 ஷ்யாம் நியூஸ்  15.11.2025 மழைகாலத்தையொட்டி தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் உறுப்பினர்களுக்கு குடை வழங்கப்பட்டது.  வடகிழக்கு பருவமழையை யொட்டி தூத்துக்குடி பிரஸ்கிளப் சாா்பில் மழைகோட் வழங்க வேண்டும் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படகலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களுக்கு போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் மழை கோட் வழங்கினாா். இந்நிலையில் பிரஸ்கிளப்பில்வைத்து உறுப்பினா்களுக்கு குடை வழங்கப்பட்டது.         நிகழ்ச்சியில், பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச்செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், மாரிராஜா, இருதயராஜ், முத்துராமன், ராஜன், லெட்சுமணன், சட்ட ஆலோசகர் சரவணன், உறுப்பினர்கள் முரளி கணேஷ், மாணிக்கம், மாரிமுத்து, நீதிராஜன், ஜெயராம், நடராஜன், அறிவழகன், இசக்கிராஜா, காதர்ம...

தூத்துக்குடி பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

ஷ்யாம் நீயூஸ் 15.11.25  தூத்துக்குடி பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள டி.சவோியாா்புரம் புனித சேவியஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவிற்கு பள்ளி தாளாளா் குழந்தை ராஜன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிாியை மாிய செல்வராணி, வரவேற்புரையாற்றினாா்.  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் லையன்ஸ் கிளப் தலைவருமான காசி விஸ்வநாதன் பாிசுகள் வழங்கி மற்றும்  ஆரோவாட்டா் பில்டா் வகைக்கு ரூ10 ஆயிரம் வழங்கி பேசுகையில் கல்வி என்பது தான் எல்லோருடைய வாழ்க்கைக்கு முதல் அடித்தளம் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றி பெற்றோா்கள் ஆசிாியா்கள் சொல்வதை கேட்டு அனைவரும் நடக்க வேண்டும். என்று பேசினாா்.      விழாவில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் நைஸ் பரமசிவம், லயன்ஸ் கிளப் செயலாளர் டேவிட், துணைத்தலைவா் ஜான் கென்னடி ராஜன், பொருளாளர் விக்னேஷ் ஜெயபால்,  இயக்குநா்...

பொன் ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் கண்டனம்

  SHYAM NEWS 13.11.2025 பொன் ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் கண்டனம்,        பொன் ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார் . தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சிக்கு என்ன ரோல்? ராகுல் காந்திக்கு என்ன ரோல்? என்று பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி கேட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது தரம் தாழ்ந்த அரசியலுக்கு  இது வழி வகுக்கிறது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஒன்றிய மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு எதிராக இந்தியாவில் என்னென்ன தவறுகளை செய்து கொண்டிருக்கிறது. அதானிக்கும், அம்பானிக்கும் என்னென்ன உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா தொடர்ந்து ஏழை நாடாக இருந்து கொண்டிருப்பது ஏன்? பணக்காரர்கள் மட்டும் தொடர்ந்து மேலும் மேலும் பணக்காரர்களாக உருவாகுவது எப்படி? என்பதை  நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும், கேள்வி எழுப்பிக் க...

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீட காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

SHYAM NEWS 12.11.2025   தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீட காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு        தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள சித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி காலபைரவருக்கு மாதம்தோறும் அமாவாசை, தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மஹா காலபைரவருக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், புனுகு அபிஷேகம் நடைபெற்றது.           அதனைத் தொடர்ந்து மஹா காலபைவரவர் மலர்களாலான சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பக்தர்கள் வாழ்வில் கடன்தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் நீங்கிடவும், செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா யாகத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது.

தூய்மை பணியாளர்களை தூண்டி விட வேண்டாம் -மேயர் பெரியசாமி

ஷ்யாம் நியூஸ்  13.11.2025   தூய்மை பணியாளர்களை தூண்டி விட வேண்டாம் -மேயர் பெரியசாமி   தூத்துக்குடி மாநகராட்சியில் அவர் லேண்ட் நிறுவனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  இதில் 1200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு முன்பணமாக வழங்கப்பட்ட தொகையை சம்பளத்தில் முழுவதுமாக பிடித்து விட்டதாக கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற விபரத்தை அறிந்த மாநகராட்சி மேயர் ஜெகன் உடனடியாக தூய்மை பணியாளர்களிடம் நேரில் வந்து குறைகளை கேட்டறிந்து அப்போது மேயர் ஜெகன் தூய்மை பணியாளர்கள் மத்தியில் பேசுகையில் தனிப்பட்ட பகையை இதில் காட்ட வேண்டாம் எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது உங்கள் கோரிக்கை என்ன என்று என்னிடம் சொல்லவும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். தனிப்பட்ட பகையை காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் பத்து ரூபாய் ஐந்து ரூபாய் என்ற அவசியம் எனக்குத் தேவை கிடையாது தொழிலாளர்களை ...

மாப்பிள்ளையூரணி பகுதியில் குடிநீா் திட்ட பணிகளை கனிமொழி எம்.பி ஆய்வு

ஷ்யாம் நீயூஸ் 13.011.25  மாப்பிள்ளையூரணி பகுதியில் குடிநீா் திட்ட பணிகளை கனிமொழி எம்.பி ஆய்வு    தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியத்தை சோ்ந்த மாப்பிள்ளையூரணி தாளமுத்துநகா் சுனாமி காலணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜல்ஜீவன் மிஷன் 2025 2026 திட்டத்தின்கீழ் ரூ.515.72 கோடி மதிப்பீட்டில் 363 குக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டு அதற்கான தண்ணீரை வழங்கும் நீரேற்றும் நிலையத்தினை அதிகாாிகளுடன் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் கோாிக்கைகளை கேட்டறிந்தாா்.         பின்னா் அதிகாாிகளுடன் பொதுமக்களுக்கு முக்கியமாக தேவையான குடிநீர் திட்டப்பணிகளை நல்லமுறையில் செயல்படுத்தி பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.       ஆய்வின் போது வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டா் இளம்பகவத் எம்.எல்.ஏக்கள் சண்முகையா, மாா்க்கன்டேயன், மேயா் ஜெகன் பொியசாமி, கூடுதல் கலெ...