விசாரணை கைதிகளை சித்தரவதை செய்த காவல் துறை கூடுதல் கண்கானிப்பாளர் - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் !
ஷ்யாம் நீயூஸ் 28.03.2023 விசாரணை கைதிகளை சித்தரவதை செய்த காவல் துறை கூடுதல் கண்கானிப்பாளர் - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் ! விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்த காவல் துறை கூடுதல் கண்கானிப்பாளர் பல்வீர் சிங் செயலுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்டம் , அம்பாசமுத்திரத்தில் போலீஸ் காவலில் இருந்த விசாரணை கைதிகளை மிகவும் கொடூர மான முறையில் தாக்கி கட்டிங் பிலையர் வைத்து பற்களை பிடுங்கி சித்தரவதை செய்த காவல் துறை கூடுதல் கண்கானிப்பாளர் பல்வீர் சிங்கின் மனித நேயமற்ற செயலை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது . பல்வீர் சிங்கின் சித்தரவதைக்கு ஆளாக்க பட்ட விசாரனை கைதிகள் பலர் உடல் ரீதியாக கடுமையாக பாதிக்க பட்டு உள்ளனர் என்கிற செய்தியும் வெளியாகி உள்ளது. ஆகவே மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து பல்வீர் சிங் மீது விசாரணையை மேற் கொண்டு பாதிக்க பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை ...