ஷ்யாம் நீயூஸ்
05.01.2022
தூத்துக்குடி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிட்டார் ஆணையர் சாருஸ்ரீ.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக 18, 19 ஆண்டுகளுக்கு உட்பட்ட 2021 டிசம்பர் 31 வரையிலான வாக்காளர் திருத்தப் பட்டியலை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வழங்கினார் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் 2,89,087 உள்ளனர் இதில் 1,47,993 பெண் வாக்காளர்கள் 1,41,024 ஆண் வாக்காளர்கள் மற்றும் 70 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர்.இந்த வாக்காளர் பட்டியல் மாநகராட்சிக்கு உட்பட்ட 283 வாக்குச்சாவடி களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார் .