ஷ்யாம் நீயூஸ்
25.01.2022
தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபானம் அனுப்புவதில் முறைகேடு?
தூத்துக்குடி மாவட்டத்தில் 152 மதுபான சில்லறை விற்பனை கடைகள் உள்ளன இந்த விற்பனை கடைகளுக்கு தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகத்தை ஒட்டி மது பான சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கிருந்துதான் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இங்கு பணிபுரியும் மகேஷ் என்பவர் 152 கடைகளுக்கும் மாதம் தலா ஆயிரம் ரூபாய் என வசூல் செய்கிறார் மாதம் குறைந்த பட்சம் 1.52 லட்சம் ஊழியர்களை மிரட்டி பணம் வாங்குகிறார் என்று டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகின்றனர். மற்றும் பணம் தறாத டாஸ்மாக் விற்பனை கடைகளுக்கு மது அருந்துபவர் விரும்பி அருந்தும் மது புட்டிகளை அனுப்புவதில்லை அல்லது பெயர் அளவுக்கு குறைவான அளவில் மட்டுமே அனுப்புகிறார் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது மற்றும் கடைகளுக்கு மது அருந்துவோர் அதிகம் விரும்பி உண்ணும் மதுபானங்களை அனுப்புவதில்லை மற்றும் குவாட்டர் பாட்டில்களுக்குப் பதிலாக ஆப் பாட்டில், ஃபுல் பாட்டில்களை அனுப்பி இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மது பிரியர்களிடம் அவர்களுக்கு தேவையான மது புட்டிகளை விற்பனை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். அனேக வாடிக்கையாளர்கள் விருப்பமான மது புட்டிகள் கேட்பதால் இல்லை இல்லை என்ற சொல்லால் விற்பனையாளர்கள் பலர் மன அழுத்தத்தில் உள்ளனர். இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட மேலாளரிடம் கேட்டபோது இது போன்று தவறு நடந்திருந்தால் சம்மந்த பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.மற்றும் இது சம்மந்தமாக மாவட்ட மேளாளர் அலுவலக வளாகத்தில் உள்ள குடோனில் பணி புரியும் மகேஸ்யை தொடர்புகொண்டபோது சரியான பதில் தர மறுத்துவிட்டார் மற்றும் காலை 10 மணிக்கு வரவேண்டிய ஊழியர் மகேஷ் மதியம் 12. 30 மணி வரை பணிக்கு வரவில்லை என்பதும் தெரிகிறது. ஒரு சில நாட்களுக்கு முன்பு மதுரை மண்டலத்தில் மதுபானத்தில் தண்ணீரை கலக்கி மீண்டும் புட்டியில் அடைத்து மது கடைகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்ததால் 3 பேர் கைது செய்யப்பட்டார் என்ற பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தூத்துக்குடியில் மேலும் ஒரு சம்பவம் இதுபோன்று நடந்திருப்பது நிர்வாகத்தில் உள்ள குளறுபடியை காட்டுகிறது என்றும் கடைகளில் கிடைக்காத எம் சி, கனி பி, டைமண்ட் ரம், போன்ற மது புட்டிகள் டாஸ்மாக் கடைகள் அடைத்த பின்பு பார்களில் தாராளமாக கிடைப்பதாக மது பிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழக முதல்வர் சிறப்பாக நிர்வாகத்தை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று கூறி வந்த நிலையில் இது போன்ற ஒரு சிலரால் டாஸ்மாக் நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் ஒரு கெட்ட பெயரை உருவாக்கி வருகின்றார். மாவட்ட மேலாளர் தக்க நடவடிக்கை எடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் மது பிரியர்கள் கேட்டுக் கொண்டனர்.