ஷ்யாம் நீயூஸ்
12.01.2022
நாசரேத் திருமண்டல பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு!
அரசு உதவிபெறும் பள்ளிகளில் யார் தாளாளர் என்ற போட்டியால் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் வெற்றிபெற்ற டி எஸ் எப் அணியினர் ஒரு கரஸ்பாண்டன்ட் நியமித்தனர் இதற்குப் போட்டியாக தோல்வியடைந்த எஸ் டி கே அணியை சார்ந்த ஒருவருக்கு கரஸ்பாண்டன்ஸ் பதவியை வழங்கியுள்ளார் பேராயர் தேவசகாயம். இதனால் மாவட்ட கல்வி அலுவலகம் யார் கரஸ்பாண்டன் என்று புரியாமல் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளனர் நாசரேத் திருமண்டல த்தில் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் மற்றும் கல்வி நிலையங்களில் இரண்டு கரஸ்பாண்டன்ஸ் உள்ளதால் யார் அதிகாரம் படைத்தவர்கள் என்று தெரியாமல் நிர்வாகம் திணறி வருகிறது தேர்தலில் தோல்வி அடைந்த எஸ் டி கே ராஜன் அணியுடன் உடன் சேர்ந்து பேராயர் தேவசகாயம் வெற்றி பெற்ற டி எஸ் எப் அணியினருக்கு இடைஞ்சல் கொடுத்து வருகிறார் இதனால் திரு மண்டலத்தின் கீழ் இயங்கும் கல்வி நிலையங்கள் தணிக்கை செய்ய முடியாமல் செயல்படுவது தெரிய வருகிறது .மற்றும் மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கியும் ஆசிரியர்களுக்கு அவர்களுடைய சம்பளம் கைக்கு சேராமல் தடுத்து வரும் பேராயர் தேவசகாயம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர் மற்றும் அரசே நேரடியாக ஆசிரியர்களின் வங்கி கணக்கில் சம்பளத்தை வரவு வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.