தூத்துக்குடியில் தன் மதத்தை சார்ந்த தனி நபருக்கு சாதகமாக செயல்படுவதாக வருவாய் துறை அதிகாரிகளை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்!
ஷ்யாம் நீயூஸ்
31.01.2022
தூத்துக்குடியில் தன் மதத்தை சார்ந்த தனி நபருக்கு சாதகமாக செயல்படுவதாக வருவாய் துறை அதிகாரிகளை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் அருகிலுள்ள பெரியநாயகிபுரத்தை சார்ந்த கிராம மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தினர். பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்குச் சொந்தமான தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் சுடலைமாடசுவாமி கோவில் கோரம்பள்ளம் பாளையம்கோட்டை ரோடு அருகில் உள்ளது .
இக்கோயிலில் ஊர் பொது மக்களால் வரிவசூல் செய்து 200 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் கொடை,திருவிழாக்கள் நடத்தி வருகின்றனர் .இந்த நிலையில் தற்போது கோயில் இருக்கும் இடம் மதிப்பு அதிகமாகி விட்ட காரணத்தால் சென்னையை சேர்ந்த சாம் தேவதாசன் என்பவர் போலி பத்திரம் போட்டு நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.இது சம்மந்தமாக தூத்துக்குடி கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த தாசில்தார் போலிப் பத்திரம் வைத்துள்ள சாம் தேவதாசனுக்கு ஆதரவாக செயல்படலாம் என்றும் கோவில் நிலத்தை அபகரித்து தனது மதத்தை சார்ந்த நபருக்கு ஆதரவாக தீர்ப்பு வருவதற்க்கான வேலைகளில் செயல்படுவார்கள் என்ற சந்தேகம் ஏழுந்துள்ளது என்றும் இந்த அதிகாரிகள் இருக்கும் போதே தனக்கு சாதகமான முடிவுகளை பெற்று கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் என்றும் தேவேந்திர குல வேளாளர் சமுகத்தை சார்ந்த கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.மதத்தையும் சமூகத்தையும் மனதில் வைத்து அரசு அதிகாரிகள் செயல்பட கூடாது ஆட்சி தலைவர் கோரம்பள்ளம் கிராமத்தை சுற்றியுள்ள கிராம மக்களிடம் தீர விசாரணை செய்து நடவடிக்க எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொணடனர் மற்றும் இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பினர்.