சமூக நீதியா! ஜாதி நீதியா அலுவலர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாயத்து தலைவி மற்றும் பஞ்சாயத்து துணைத்தலைவர்!
ஷ்யாம் நீயூஸ் 30.11.2021 சமூக நீதியா ! ஜாதி நீதியா ! தலித் அலுவலர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாயத்துத் தலைவி ! மற்றும் பஞ்சாயத்து துணை தலைவா். தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து கோரம்பள்ளம் பஞ்சாயத்து ஆகும் இந்த பஞ்சாயத்தில் கடந்த இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அலுவலக செயலராக பணிபுரிந்து வருபவர் பரமசிவன் இவர் ஒரு தலித் சமுகத்தை சார்ந்தவர் இவர் 01 .06.1996 முதல் அரசாணை எண் 170 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை 27. 01.1967 ன் படி பணியாற்றி வருகிறார் அதன்படி பதவி உயர்வு பெற்று பணி செய்து வருகிறார் .2012 ஆம் ஆண்டு பஞ்சாயத்து துணைத்தலைவராக பதவி வகித்தவர் அதிசயராஜ் அவர் காலத்தில் பஞ்சாயத்து நிதி 6.26 லட்சத்தை கையாடல் செய்ததாக உதவி இயக்குனர் ஊராட்சிகள் நாகராஜ் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை வெளியிட்டார் இதனடிப்படையில அப்போதைய மாவட்ட ஆட்...