சிலுவைப்பட்டியில் நீர் மோர் பந்தலை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்
ஷ்யாம் நீயூஸ்
22.04.2023
சிலுவைப்பட்டியில் நீர் மோர் பந்தலை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலுவைப்பட்டியில் தி.மு.க.வின் ஏற்பாட்டில் அமைத்திருந்த நீர் மோர் பந்தலை கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசனி, உள்ளிட்ட பல்வேறு குளிர்பானங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில்; ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சக்திவேல், பாலம்மாள், ஜெயசீலன், கிளைச்செயலாளர் அன்புரோஸ், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் தாமஸ், தி.மு.க பிரமுகர்கள் முத்து, கௌதம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.