ஷ்யாம் நீயூஸ்
05.04.2023
தூத்துக்குடி 40வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
அதன்படி மாநகராட்சி 40வது வார்டுக்குட்பட்ட தெற்கு காட்டன் சாலையில் அமைச்சர் கீதாஜீவனிடம் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதில் காந்திநகரில் வீட்டுத்தீர்வை, குடிநீர், இணைப்பு, நீண்டகாலமாக வழங்கப்படாமல் இருப்பதை நிறைவேற்றி தர வேண்டும். விதவைப்பெண் அரசு உதவித்தொகை வேண்டி மனு அளித்தனர். லயன்ஸ்டவுன் பகுதியில் கடந்த ஜனவரி 13ம் தேதி அனிசா என்ற பெண் இறந்தார். இதில் மர்மம் இருக்கிறது என்று அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் மருத்துவமணை பரிசோதனையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுவரை அந்த கொலைக்கு காரணமான குற்றவாளி கைது செய்யப்படவில்லை. அதை உடனடியாக மாவட்ட எஸ்.பி, பாலாஜி சரவணிடம் கூறி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று அந்த பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் அமைச்சரிடம் முறையிட்டனர். அதை கனிவோடு கேட்ட அமைச்சர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் பின்னர் மரக்குடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கடற்கரை பகுதி சில தூரங்களில் இப்பகுதி இருப்பதால் கழிவு நீர் கால்வாய் சரியாக நீரோட்டம் செல்லாமல் குடியிருப்புக்குள் வருகிறது. அதை சரிசெய்து தரவேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் கூறுகையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், என்று உத்தரவாதம் அளித்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் ரிக்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, தொழிற்சங்க தலைவர் மரியதாஸ்,
மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, வட்ட செயலாளர் டென்சிங், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், இசபெல்லா, நிர்வாகிகள் சுரேஷ்குமார், அண்டோ, ஜஸ்டின், பெல்லா, கமலி, வால்டர், மற்றும் பாஸ்கர், மணி, அல்பட், உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.