ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும்! 600க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
ஷ்யாம் நீயூஸ்
27.04.2023
ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும்! 600க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று 300 பெண்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் வழக்கறிஞர் டாக்டர் மகாராஜன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில் அமெரிக்கா மேற்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் ஸ்டெர்லைட் மாதிரியான ஆலைகளை திறக்கவே முடியாது சுற்றுப்புற சூழலுக்கு பயங்கரமான கேடு விளைகின்ற ஆலை இந்த ஸ்டெர்லைட். இந்த ஆலையானது தாமிரம் ,கந்தக அமிலம், பாஸ்பரிக் அமிலம் போன்றவற்றை தயாரிக்கிறது இவற்றை தயாரிக்கும் போது ஒரு டன் தாம்பரம் தயாரிப்பதற்கு இரண்டு கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியேறுகிறது அப்படி வெளியேற்றப்படும் போது காற்றில் கலக்கிறது அதை போல் மூன்று டன் திடக்கழிவு வெளியேறுகிறது திடக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது இல்லை என்றால் நீர் மேலாண்மை பாதிப்படைய செய்யும் இங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு உடல் நிலையை மிகவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இதில் உலக நாடுகளின் சதி இருக்கிறது வளர்ந்த நாடுகள் எல்லாம் தங்கள் மக்கள் நிம்மதியான காற்றை சுவாசிக்க வேண்டும் நல்ல தண்ணீரை பருக வேண்டும் என்பதற்காக இது போன்ற ஆலைகளை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பெரிய பெரிய முதலாளிகளிடம் பேசி இங்கு தள்ளி விடுகின்றனர் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடிக்கு கிடைத்த ஒரு சாபக்கேடு. 2011 ,2012 ல் 19 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளனர் இந்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் அதில் 16,000 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டில் மூலப் பொருட்கள் வாங்கி அந்த மூலப் பொருட்கள் வாங்கிய நாட்டிற்க்கே தாமிர்தத்தை ஏற்றுமதி செய்துள்ளனர் ஏன் மூலப் பொருட்கள் கொடுத்த நாடுகளில் அவர்கள் நாட்டில் ஏன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முன்வரவில்லை அங்குத் திறந்தால் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று இருக்கும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படும் பல உயிர்கள் பலியாகி இருக்கும். இப்ப இந்த ஸ்டெர்லைட் ஆலையை முடியதால் வேலை வாய்ப்புகள் பறிபோய் விட்டன என்று சொல்லி ஒரு வதந்தியை கிளப்பி இந்த ஆலய திறப்பதற்கு முயற்சி பண்ணுகின்றனர் ,மொத்தத்தில் 50 நபர்கள் தான் தூத்துக்குடி மக்கள் வேலை பார்த்திருப்பார்கள். மீது நபர்களுக்கு கோட்ரஸ் கட்டிக் கொடுத்திருக்கிறது ஆலை நிர்வாகம் யாருக்கு வீடு கட்டி கொடுப்பார்கள் வெளியூரிலிருந்து வந்து வேலை செய்வதற்கு தான் வீடு கட்டி கொடுப்பார்கள் அப்படி என்றால் இங்கு பணிபுரிபவர்கள் வெளியூரை சேர்ந்தவர்கள் தான் .தூத்துக்குடி மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையால் பெரிய அளவில் வேலை வாய்ப்பு வழங்கவில்லை வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்பது பெரிய பொய். கந்தகட்ட டை ஆக்சைடின் ஆபத்து மிக அதிகமாக இருக்கும் காற்றில் அளவுக்கு அதிகமாக கலந்தது என்றால் 2012 13-ல் ஒரு விபத்து ஏற்பட்டது தூத்துக்குடியில் நிறைய மக்கள் மூச்சுத் திணறால் பாதிக்கப்பட்டனர் இந்த நிலை நீடித்திருக்குமேயானால் பல பேர் உயிர் இழக்கும் நிலை இருந்திருக்கும். ஜெயலலிதா அரசு இந்த நிர்வாகத்தை தடை செய்தது தடை செய்த பின்பு சுப்ரீம் கோர்ட்டில் தடையை உடைத்து வந்தனர் ஆலை நிர்வாகத்தினர். 2018 ல்மக்கள் போராட்டம் பெரிய அளவில் இருந்தது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் செயல்பட்டதால் பெரிய அளவில் போராட்டம் எடுத்துச் செல்லப்பட்டது 2018 மே மாதம் ஆலை மூடப்பட்டது ஆறு ஆண்டுகள் திறக்க முடியாமல் இருந்த ஆலை நிர்வாகிகள் அரசின் கதவுகளை தட்டிக் கொண்டே இருந்தனர் அரசு என்ன சொல்கிறது என்றால் மக்கள் பெரிய அளவில் எதிர்ப்பில் இருக்கின்றனர் அதனால் இந்த தொழிற்சாலையை திறப்பது கஷ்டம் என கூறிவிட்டது .இதனால் ஆலை நிர்வாகம் இங்கு இருக்கக்கூடிய குட்டி குட்டி கட்சிகள் சமூக அமைப்புகள் ஜாதி அமைப்புகள் கையில் எடுத்து வாரவாரம் திங்கட்கிழமை மண்டே பெட்டிஷன் கொடுக்கிற போர்வையில் மீடியாக்களிடம் ஸ்டெர்லைட் ஆலை இல்லாமல் எங்கள் வேலை பாதிப்பு ஏற்பட்டுவிட்டது பொருளாதார பாதிக்கப்பட்டு விட்டது அந்த ஆழையால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்ற தோட்டத்தை ஏற்படுத்த முயற்சி பண்ணுகின்றனர் அப்படிப்பட்ட சமூக அமைப்புகளுக்கு சிறிய அளவில் பண உதவிகளை செய்து ஆலை நிர்வாகம் தூண்டி வருகிறது. இவற்றை கண்டுபிடித்து அபாயகரமான தொழிற்சாலையான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எப்போதுமே திறக்க கூடாது ஆலைக்கு ஆதரவாக குரல் கொடுக்கக்கூடிய சமூக விரோத சக்திகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்த கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தை நேதாஜி சுபாஷ் சேனை புரட்சி பாரதம் போன்ற அமைப்பு சார்பாக முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.