ஷ்யாம் நியூஸ்
17.11.2020
தூத்துக்குடியில் நீதிபதிகளுக்கே நீதி இல்லையா? நீரில் மிதக்கும் நீதிபதிகள் குடியிருப்பு!
தூத்துக்குடியில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக தூத்துக்குடி மாநகரம் முழுவதும் தண்ணீரீல் மிதந்து வருகிறது. தூத்துக்குடியின் மத்திய பகுதியில் நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளில் நீதிபதிகள் அரவது குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். நேற்று பெய்த கனமழையால் அரசு மருத்துவமணை, நீதிமன்றம், நீதிமன்ற குடியிருப்புகள் நீரில் மூழ்கின. கடந்த ஆண்டும் பெய்த மழையில் இந்த நீதிபதி குடியிருப்பு நீரில் மூழ்கியது அப்போது பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி மூலம் 13.5 லட்சம் செலவில் தண்ணீர் வெளியேற்றப்பெற்று மீண்டும் தண்ணீர் தேங்காதபடிக்கான வேலை நடைபெற்றதாக கூறப்படுகிறது .ஆனால் 13.5 லட்சம் வேலை நடந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவில்லை மாறாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான அளவில் நீதிபதிகள் குடியிருப்புகள் தண்ணீரில் மிதக்கிறது இந்திய அரசியல் சாசனம் படித்த நீதிபதிகள் குடியிருக்கும் நீதி அரசர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாமானியன் குடியிருப்பு பகுதிகள் எப்படி இருக்கும்? என்று நினைத்துப்பார்க்கவே பயமாக உள்ளது .மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கிறது பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர் .மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக எடுக்காமல் மழைக்காகவே காத்திருந்து ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கிய 995 கோடியை ஏப்பம் விட காத்திருந்தது போல் உள்ளது என பொதுமக்கள் சரமாரியாக கேள்வியை எழுப்புகின்றனர் .இப்பொது உள்ள நிலவரப்படி இந்த தண்ணீரை வெளியேற்ற குறைந்தது 10 நாட்களாவது ஆகும் என்ற நிலையில் மீண்டும் வானிலை அறிக்கை தூத்துக்குடிக்கு ரெட் அலர்ட் கொடுத்திருப்பது பெரும் அச்சத்தை கொடுக்கிறது . நீதிபதிகள் குடியிருப்பில் தேங்கி உள்ள நீரை பார்க்கும்போது நீதிபதிகள் நீதிமன்றத்திக்கு வருவதற்கு நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்ற நிலை உருவாக்கி உள்ளது .சரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது .