தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகம் முன்பு 30% போனஸ் கேட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !
ஷ்யாம் நியூஸ்
06.11.2020
தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகம் முன்பு 30% போனஸ் கேட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !
தமிழக அரசின் வருவாய்களில் பெறுபகுதியை தருவது டாஸ்மாக் நிறுவனம் ஆகும் .அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை 17 ஆண்டுகளாக நிரந்தரபடுத்தாமல் அரசு குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த தொழிலாளிகளாக நடத்தி வருகின்றது .நீண்டகாலமாக தொழிற்சங்கங்கள் டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் வாரவிடுமுறை வேண்டும் என்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் பிற அரசு ஊழியர்களுக்கு உள்ள அரசு சலுகைகள் தங்களுக்கும் வேண்டும் என்றும் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர் .கொரான காலத்திலும் தங்கள் உயிரை பணயம் வைத்து அரசின் கஜானாவை நிரப்பிவருகின்றனர் .கடந்த ஆண்டு 20% போனஸ் வழங்கிய டாஸ்மாக் நிர்வாகம் இந்த ஆண்டு 10% மாக குறைத்துயுள்ளது .இதனை கண்டித்து இன்று தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு 30% போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் .கொரான காலத்தில் உயிரை பணையம் வைத்து பணிபுரிந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு 30% போனஸ் உடனடியாக வழங்கவேண்டும் என்றும் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட 50% அபராத தொகை வசூலிப்பதை கைவிடவேண்டும், ஆய்விற்கு செல்லும் அதிகாரிகளின் அத்துமீறலை தடுக்கவேண்டும் என்றும் குறைவான விற்பனை உள்ள கடைகளில் அதிக பணியாளர்களும் அதிகமாக விற்பனையாகும் கடைகளில் குறைவான பணியாளர்கள் பணிபுரிவதை தடுத்து பணி நிரவல் செய்யவேண்டும், கொரான காலத்தில் பணிபுரிந்து இறந்த டாஸ்மாக் ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசுப்பணி வழங்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்தனர் .ஆர்ப்பாட்டத்தில் ஆர் .வேல்முருகன் தலைமை தாங்கினார் .சு சீ .இரவீந்திரன் ஜி வி ராஜா ,நெல்லை நெப்போலியன் ,கருப்பசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர் .கே .பூங்கலிங்கம் எம் .ஜெகன், ஜி .முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .எஸ் .சந்தன சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார் .மற்றும் கூட்டுக்குழு உறுப்பினர்கள் சின்னதுரை,மஹேந்திரன் ,எம் ,முருகன் ,எம்.முத்துராஜ் ,எஸ்.கிருஷ்ணமூர்த்தி ,டி .பிரான்சிஸ் எஸ்.இம்மானுவேல் ஆர் .காசி,எஸ்.பலவேசமுத்து ,கே .கொம்பையா ,பி.அறுமுக நயினார் ,பி.கசிபெருமாள் எ .செல்லக்குட்டி ,எம் ரவி பி.கே ரஞ்சித் மற்றும் ஏராளமான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர் .