ஷ்யாம் நியூஸ்
12.11.2020
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் வைப்பார் கடற்பகுதி உள்ளது இங்கு புல எண் 989 ல் சுமார் 1600 ஏக்கர் அரசு புறம்பக்கு நிலம் உள்ளது . இங்குள்ள கடற்கரை ஓரம் கடல் அறிப்பு மற்றும் அழிக்காடு பகுதில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதி மக்கள் உப்பு உற்பத்தி தொழில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்த இடத்தை தொழிற் வளர்ச்சிக்காக சிபிகட் தொழிற்நிறுவனத்திற்கு அரசு வழங்க முடிவு செய்து உள்ளது .ஏற்கனவே உப்பு உற்பத்தி தொழில் செய்து வரும் மக்கள் இங்கு சிபிகாட் அமைந்தால் 300 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சிபிகாட் அமைக்கும் பணியை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்று கலைஞானபுரம் வட்டார சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் உறுப்பினர்கள் தூத்துக்குடி வந்த முதல்வரிடம் மனு கொடுத்தனர் .மேலும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் உறுப்பினர்கள் கூறும்போது தங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக உப்பு உற்பத்தி செய்து வருகிறோம் இதுவே எங்களின் வாழ்வாதாரமாகும் நாங்கள் நடத்திவரும் உப்பளத்திற்கு லீசுக்கு வேண்டும் என்று பலமுறை மனு அளித்து உள்ளோம் ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை மற்றும் உப்பு உற்பத்தியை அழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ..முதல்வர் அவர்கள் எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்காமலும் இயற்கை உப்பு உற்பத்தியை பெருக்கவும் உதவி செய்யவேண்டும் .சிபிகாட் நிர்வாகத்தை இயற்கை உப்பு உற்பத்தி இல்லாத பகுதிகளில் மாற்றி அமைக்குமாறும் கேட்டுக்கொண்டனர் .மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என உறுதியளித்தார் என்றும் தெரிவித்தனர் .