ஷ்யாம் நியூஸ்
15.10.2020
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த காதலனின் அப்பா தம்பி இருவர் கடத்தல்.!
தூத்துக்குடி கூட்டாம்புளியை சார்ந்த ராஜா(49) இவரது மகன் தினேஷ் (21) இவர்கள் இருவரையும் நேற்று இரவு 6 பேர் கொண்ட கும்பல் அடித்து காரில் கடத்தி சென்றுள்ளனர்.காரில் கடத்தியவர்கள் காரில் வைத்தே அடித்து உதைத்துள்ளனர் பின்னர் தாராபுரம் பகுதியில் ஒரு காட்டுக்கள் இறக்கிவிட்டுவிட்டு சென்றுள்ளனர்.தற்போது அங்கிருந்து நமது செய்தியாளர்க்கு வரும் செய்தியில் அவரது மகன் காணாமல் போனது சம்மந்தமாக புதுகோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் என்றும் காவல்துறை விசாரணையில் அவரது மகன் உதயகுமாரும் அவருடன் படித்த கோரம்பள்ளம் பகுதியை சார்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் யாருக்கும் தெறியாமல்
ஏங்கோ சென்று விட்டதாக தெறிகிறது . பெண்ணின் தாயார் செல்வி இவர் தூத்துக்குடி கணிமவளத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்தான் பெண்ணை நாங்கள் மறைத்து வைத்துள்ளதாக அடி ஆட்கள் அணுப்பி வைத்து காதலனின் தந்தையையும் சகோதரனையும் கடத்தி உள்ளனர் என்று கூறினர். கடத்தப்பட்ட நபர்கள் தற்போது அடிபட்டு காயத்துடன் தாராபுரம் அப்பகுதியில் உள்ளார் என தகவல்கள் வருகிறது காவல்துறை அதிகாரிகள் அவர்களை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உறவிினர்கள் கேட்டுக்கொண்டனர்.