ஷ்யாம் நியூஸ்
26.08.2020
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலரும் : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., பேட்டி
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி வரும்போது மாநகராட்சியின் அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெறும் என தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் புதிய சாலைகள், கால்வாய் மற்றும் பூங்காக்கள் பணிகளை இன்று ஆய்வு செய்தார். இதில் தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு ரூ.6.28 கோடி மதிப்பிலான கட்டப்பட்டு வரும் போக்குவரத்து பூங்கா,2 அறிவியல் பூங்கா ஆகியவற்றின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, மாநகராட்சி மழைகாலம் வருவதற்கு முன்பு திட்டப்பணிகளை தூரிதமாக முடுக்கிவிடுவதற்கு அதிகாரிகளை அறிவுறுத்துவதற்காக வந்துள்ளேன். பல்வேறு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னும் முழுமையாக முடிப்பதற்கு சில காலம் ஆகும்.
அப்போது செய்தியாளர் கூறிக்கிட்டு, ஸ்மார்ட் சிட்டி பணிகளைத் தவிர மாநகராட்சியில் வேறு எந்த பணிகளும் நடைபெறுவது இல்லை. அதேபோல் நகரில் உள்ள மற்ற சாலைகள் பழுதடைந்து உள்ளது. அந்த பணிகளை மாநகராட்சி கவனிப்பதில்லை என்று கேட்டதற்கு, மீண்டும் "தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலரும், அப்போது அனைத்து வேலைகளும் துரிதமாக நடைபெறும்" என்று கூறினார். தூத்துக்குடி எம்.எல்.ஏ., கீதா ஜீவன், திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.