தூத்துக்குடியில் மின் இணைப்பு இல்லாத நியாய விலைக்கடை குடும்ப அட்டைகள் பதிவதில் தாமதம் : பொதுமக்கள் அவதி!
ஷ்யாம் நியூஸ்
17.08.2020
தூத்துக்குடியில் மின் இணைப்பு இல்லாத நியாய விலைக்கடை குடும்ப அட்டைகள் பதிவதில் தாமதம் : பொதுமக்கள் அவதி!
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கால்டுவெல்காலனி பகுதியில் 26AA015 கடை எண் கொண்ட நியாவிலை கடையானது அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
2017 ஆம் ஆண்டு முதல் நியாயவிலைக் கடையில் மின்னணு குடும்ப அடைகள் ( ஸ்மார்ட் கார்டு) மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.கடையில் இருக்கும் பாயின்ட் ஆப் சேல்ஸ் மிசினில் ஸ்மார்ட் கார்டை ஸ்வைப் செய்து பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ,கால்டுவெல் காலனியில் அமைந்துள்ள நியாயவிலைக்கடையில் இதுநாள் வரை அங்கு மின் இணைப்பு இல்லாமலே இயங்கி வருவதாக கூறப்படுகிறது.இதனால் நியாவிலை கடை ஊழியர்கள் வீட்டிற்கு முந்தைய தினம் மிஷினை கொண்டு சென்று சார்ஜ் செய்து எடுத்து வந்து பொருட்களை வழங்கி வருகின்றனர்.ஆனால் பாயின்ட் ஆப் சேல்ஸ் மிசினில் நாள் முழுவதும் மின்சேமிப்பு நிற்காமல் அனைந்து விடுகிறது.இதனால் நாள் ஒன்றுக்கு குறைந்த எண்ணிக்கையிலான அட்டை தாரர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்கக்கூடிய நிலை ஏற்படுகிறது.இவ்வாறான நிலையில் பொதுமக்களுக்கு தேவையான நேரத்தில் தேவையான பொருட்களை நியாயவிலைக் கடையில் பெற முடியாமலும், தினமும் கடைக்கு சென்று காத்திருந்து பின் திரும்புவதால் நேரம் வீணடிக்கப்பட்டு, அலைக்கழிக்கும் நிலைக்கு தாங்கள் ஆளாகுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களின் இத்தகைய சிமரங்களுக்கு நியாயவிலைக்கடையில் மின் இணைப்பு இல்லாததே காரனம் என்றும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.கூடிய விரைவில் இதற்கு தீர்வு எட்டப்படாவிட்டால் பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடந்த போவதாக அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.
காலம் தாழ்த்தாது பொதுமக்களின் குறைகளை சம்மந்த பட்ட அதிகாரிகள் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாக உள்ளது.