ஷ்யாம் நியூஸ்
12.08.2020
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் எதிரில் பயங்கர தீ... பஞ்சாயத்து தலைவர் அலட்சியம்!
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியநாகபுரம் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தீ பிடித்து எரிந்தன.காட்டுக்குள் எரிந்த தீ காற்றின் வேகத்தில் மளமளவென ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நல்லதம்பி
மருத்துவமனை வரை பரவியது.தகவல் அறிந்த அய்யனடைப்பு கிராம நிர்வாக அலுவலர் திபலெட்சுமி தகவலின் பெயரில் சிப்காட் தீ அணைப்பு படையினர் அலுவலர் பெ.முனியசாமி தலைமையில் தீயை அணைத்தனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் தீ பிடித்து எறிந்து கொண்டு இருந்து.அப்போது அப்பகுதி பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மற்றும் காய்ந்த சருகுகள் அதிக அளவு உள்ளது தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் பஞ்சாயத்து தலைவர் அதில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை அதனால் ஏற்பட்ட தீ தான் இது என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர் நல்லவேலையாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.