தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணியினா் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் இபிஎஸ் அணியில் ஐக்கியம்
ஷ்யாம் நீயூஸ்
28.09.25
தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணியினா் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் இபிஎஸ் அணியில் ஐக்கியம்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் பஜாரில் உள்ள ஓபிஎஸ் அணி தொழிற்ச்சங்கமான ஜெ ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தை சேர்ந்த கௌரவ ஆலோசகர் லோகு கணேஷ் ஏற்ப்பாட்டில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிா்கட்சி தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று டூவிபுரத்தில் உள்ள மாநில அதிமுக வர்த்தக அணி அலுவலகத்தில் மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித செல்லப்பாண்டியன் முன்னிலையில் தெற்கு மண்டல ஓட்டுநர்கள் அணி அவைத்தலைவர் மாரிமுத்து தலைவர் ஆனந்த் செயலாளர் சுபாஷ் வேளாங்கண்ணி பொருளாளர் பூண்டி செல்வம் உறுப்பினர்கள் செந்தில்குமார், மாரிமுத்து, மாரிமுத்து, இளையராஜா, இசக்கிராஜா ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அதிமுக வில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் சி. த.செல்லப்பாண்டியன் அனைவருக்கும் சீருடை வழங்கி சிறப்பான முறையில் பணியாற்றி அதிக உறுப்பினா்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
