தூத்துக்குடி வட்டாட்சியர் இலஞ்சம் வாங்குவதற்கென தனியார் அலுவலகம் இயங்குகிறது. சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு!
ஷ்யாம் நீயூஸ்
09.09.2026
தூத்துக்குடி வட்டாட்சியர் இலஞ்சம் வாங்குவதற்கென தனியார் அலுவலகம் இயங்குகிறது. சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு!
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு என்று தனி அலுவலகம் உள்ளதாக சமூக ஆர்வலர் வழக்கறிஞர் காந்திமதி நாதன் தெரிவித்துள்ளார் அவர் தெரிவித்துள்ள குறிப்பில்.
மாவட்டத்தின் தலைநகராக இருந்து வரும் தூத்துக்குடி மையப் பகுதியில் தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது இந்த அலுவலகத்தில் தினசரி மக்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காகவும்மற்றும் பட்டா தேவைகள் வாரிசு சான்று விண்ணப்பம் போன்ற இதர சான்றுகளுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை அனுகுகிறார்கள்
பெரும்பாலும் விண்ணப்பங்களானது ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் அந்த விண்ணப்பங்களை லஞ்சம் பெறுவதற்காகவும் ஆதாயம் அடைவதற்காகவும் வேண்டுமென்றே உள்நோக்கம் கொண்டு நிராகரிப்பு செய்கிறார்கள்
மனுதாரர்களை நேரில் அழைத்து அது சரியில்லை இது சரியில்லை என அலையவிட்டு பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகாமையில் அமைந்துள்ள பகுதியில் தனியார் கட்டிடத்தில் முன்னாள் துணை ஆட்சியர் ஒருவர் விண்ணப்பங்களை பெற்று தருவதாக கூறி விண்ணப்பதாரர்களை அணுகி நூதன வகையில் லஞ்சத்தை பெறுகிறார்கள்
அண்மையில் பணி ஓய்வு பெற்றமுன்னாள் துணை ஆட்சியர் பிடித்துள்ள வாடகை கட்டிடத்தில் நாள்தோறும் இலஞ்ச பணம்வாங்கப்பட்டு வட்டாட்சியர் முரளிதரன் உட்பட பல அதிகாரிகள் அலுவலகம் நேரம் முடிந்த பின்னர் பங்கு பிரித்து கொள்வது தினசரி நடந்து வருகிறது
வட்டாட்சியர் முரளிதரன் இதுவரையிலும் எத்தனை விண்ணப்பங்களை வேண்டுமென்றே நிராகரிப்பு செய்துள்ளார் என்பதை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து விசாரணை நடத்த வேண்டும்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மட்டும் நேர்மையாக நடந்து கொண்டால் லஞ்சம் ஒழிந்து விடப் போவதில்லை தனக்கு கீழ் பணிபுரியும் இது போன்ற நியாயமற்ற வகையில் மக்களிடம் லஞ்சம் பெறும் நபர்களை கண்டறிந்து அவர்களை கூர்நோக்குப் பணியிடத்திலிருந்து பணி மாறுதல் செய்து நேர்மையான வட்டாட்சியரை தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியராக நியமித்தால் மட்டுமே லஞ்சம் பெறுவது பெருமளவு குறையும் என்பதால் மாவட்டத்தின் தலைநகரிலேயே லஞ்சம் தலைவிரித்து ஆடுவது என்பது மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு தலைகுனிவாகும் என தெரிவித்துள்ளார் இது தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.இதுபோல் முன்னாள் வட்டாட்சியர் ஆக இருந்தவர்களும் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் பட்டா மாறுதல்களில் சரமாரியாக ஊழல் நடைபெற்றுளளது. இந்த பட்டா மாறுதல்களில் கிராம நத்தம் பகுதியில் குடியிருந்து வரும் ஏழைகள் பலர் இன்றும் குடியிருந்து வரும் நத்தம் புறம்போக்கு நிலம் தங்கள் பெயரில் பட்டதாக இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் கிராம நிர்வாக அதிகாரிகள் பணம் எனும் ஊழல் அரக்கனுக்கு அடிமையாகி அவர்களுக்கு தெரியாமையே பல பட்டாக்களை பெயர் மாற்றம் செய்து கோல்மால் செய்துள்ளனர் இவை அனைத்துமே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஒரு குழு அமைத்து கடந்த 10 ஆண்டுகளாக பட்டா மாறுதல் செய்யப்பட்ட ஆவணங்களை சரிபார்க்க நேர்ந்தால் பூதம் போல் நிறைய போலி பட்டா மாறுதல்கள் வெளியே தெரியவரும் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கும் ஒரு விமோசனம் கிடைக்கும் என்று பொதுமக்கள் தாமாகவே தகவல் தெரிவிக்கின்றனர்.
