டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் முன்னறிவிப்பு கடிதத்தை வழங்கினார் மாநிலத் துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன்.
ஷ்யாம் நீயூஸ்
27.09.2025
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் முன்னறிவிப்பு கடிதத்தை வழங்கினார் மாநிலத் துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன்.
காந்தி பிறந்த அக்டோபர் 2ல் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில தலைநகர் சென்னையில் ஒத்துழையாமை இயக்கம் போராடம் நடத்த உள்ளனர். தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் ஏ ஐ டி யு சி பணியாளர்கள் சங்கம் சார்பாக தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகத்தில் முன்னறிவிப்பு கடிதத்தை ஏ ஐ டீ யூ சி மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் வழங்கினார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இதுவரை காலம்முறை ஊதியமோ பணி நிரந்தரமோ வழங்காமல் தற்காலிக பணியாளராகவே பணிபுரிந்து வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலம் முறை ஊதியம், பணி நிரந்தரம் ,இ.எஸ்.ஐ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும் , பணி விதிகளை உருவாக்குதல், 8 மணி நேர வேலை, வார விடுமுறை, பண்டிகை கால விடுமுறை, ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துதல் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து ஏ ஐ டி யூ சி டாஸ்மாக் பணியாளர் சங்கம் உட்பட அனைத்து டாஸ்மாக் பணியாளர் சங்கங்கள் போராடி வருகின்றன.
இவற்றை வலியுறுத்தி வரும் அக்டோபர் 2 தேதி காந்தி பிறந்த நாளில் சென்னை தலைமைச் செயலகம் முன்பு டாஸ்மாக் சங்கங்கள் அரசுக்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டு ஒத்துழையாமை இயக்கம் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ ஐ டீ யூ சி பணியாளர் சங்கம் சார்பாக மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் தலைமையில் போராட்டத்திற்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன பின்பு தூத்துக்குடி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் முன்னறிவிப்பு கடிதமும் வழங்கப்பட்டது.
