முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் உயர்வு; அரசு அறிவிப்பு

  SYAM NEWS 28.03.2025 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் உயர்வு;  அரசு அறிவிப்பு 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியத்தை 17 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்த அறிவிப்பானது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் 319 ரூபாயிலிருந்து 336 ரூபாயாக உயர இருக்கிறது. 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் மார்ச் 29ஆம் தேதி ( 29.3.2025 - சனிக்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

 SHYAMA NEWS 25.03.2025 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு! தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநில அரசில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 10 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு சார்பில் உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் இன்று (25.03.2025) உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “மதுரை சரக டி.ஐ.ஜி.யாக அபினவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாக சந்தோஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர...

பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி காலமானார்

  SHYAM NEWS 25.03.2025 பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி காலமானார் இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். சென்னையில் வசித்து வந்த மனோஜ் பாரதிக்கு வயது 48. பாரதிராஜ் இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடிகராக அறிமுகமான அவர், சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சாதுரியன், மகா நடிகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சரத்குமார், முரளி ஆகியோருடன் இணைந்து அவர் நடித்த சமுத்திரம் திரைப்படம் மற்றும் சத்யராஜுடன் இணைந்து நடித்த மகா நடிகன், வருசமெல்லாம் வசந்தம் ஆகிய படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. சமீபத்தில் இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியதன் மூலம், இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவரின் மறைவுக்கு தி மனோஜ் பாரதியின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில், "நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ...

தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மீனுக்கு 'தமிழிகம்' என பெயர்?

 SHYAM MEWS 21.03.2025 தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய  மீனுக்கு 'தமிழிகம்' என பெயர்? மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராதவை விலாங்கு மீன்கள். மெல்லிய, வழுவழுப்பான மற்றும் நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை. அத்தகைய விலாங்கு மீன்களில், ஒரு புதிய இனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விலாங்கு மீன் அதிகம் பேசுபொருள் ஆவதற்குக் காரணம் அதன் பெயர். அதற்கு அரியோசோமா தமிழிகம் (Ariosoma tamilicum) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை அடையாளப்படுத்தும் விதமாக விலாங்கு மீனுக்கு பெயர் சூட்டியது ஏன்? சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இந்தப் புதிய வகை விலாங்கு மீன் குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன? இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) கீழ் செயல்படும் தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் (NBFGR) ஆய்வாளர்கள், இதுவரை அறியப்படாத காங்கிரிடே (Congridae)) என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வகை விலாங்கு மீனை அடையாளம் கண்டுள்ளனர். இந்தப் புதிய விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்ட கார...

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யத் தடை!

 SHYAM NEWS 15.03.2025 எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யத் தடை! கரூர் மாவட்டம் நேரூர் என்ற கிராமத்தில் சத்குரு சதாசிவ சபா உள்ளது. இந்த சபாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வந்துள்ளது. அந்த நாளில் உணவு சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான மணிக்குமார், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பில் எச்சில் இலைகளில் படுத்து உருளுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் சடங்குக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தனி நீதிபதியான ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு கடந்தாண்டு மே மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பக்தர்கள் வழிபாட்டு முறையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அதற்கு அ...

மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி -முதல்வர் M K ஸ்டாலின் !

SHYAM NEWS 09.03.2025   மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி -முதல்வர் M K ஸ்டாலின் !   மாற்றுத்  திறனாளிகளுக்கு உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரியப் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ஆகியவற்றில் வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். என தொழிலாக முதல்வர் அறிவித்துள்ளார் . சென்னை கொளத்தூர் உள்ள பெரியார் நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனையான பெரியார் அரசு மருத்துவமனையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (27.02.2025) திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில்,எல்லா பிறந்தநாளுக்கும் ஒரு திட்டத்தை அறிவிப்பது போன்று இந்த பிறந்தநாளுக்கும் ஒரு திட்டத்தை அறிவிக்கிறேன் ,  மாற்றுத் திறனாளிகள் என்ற பெயர் கொடுத்து, சகோதர சகோதரிகளின் சுயமரியாதையைக் காத்தவர் கலைஞர். அவரது வழியில், அந்த துறையை என்னுடைய பொறுப்பில் வைத்துக்கொண்டு, நிறையத் திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் மாற்றுத்தி...

தமிழகத்துக்கு 61 MP தமிழக கட்சிகள் உறுதி !

ஷ்யாம் நியூஸ்  05.03.2025 தமிழகத்துக்கு 61 MP தமிழக கட்சிகள் உறுதி ! தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் சூடு பிடித்துவரும் வேளையில் அனைத்து கட்சி கூட்டம்  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமயில் சென்னையில் நடைபெற்றது . இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநிலமான தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் குறித்து விவாதிக்க, மாநில அரசு புதன்கிழமையன்று (மார்ச் 05) இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தியது . இந்தக் கூட்டத்தில் 63 அரசியல் காட்சிகள் கலந்து கொண்டன . இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி ஆகியவை அறிவித்தன. இதுதவிர, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தில்  பேசிய முதல்வர் ஸ்டாலின், "இப்போது உள்ள 543 தொகுதிகள் தொடர்ந்தால், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்கிறார்கள். அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டால்,...

சீமான் ஒரு விபச்சாரன் தி. க அதிரடி பதில்

 SHYAM NEWS 03.03.2025 சீமான் ஒரு  விபச்சாரன் தி. க அதிரடி பதில் ! பெண் விபச்சாரி என்றால் ஆணுக்கு பெயர் "விபச்சாரன்".. சொன்னதும் பெரியார்தான்.. சீமானுக்கு திக பதிலடி! இது தொடர்பாக திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி கூறியிருப்பதாவது: ஆணாதிக்க சமூகத்தில், எந்த வார்த்தை சொன்னால் பெண்களே சக பெண்ணை இழிவாக நினைப்பார்கள் என்பதை தெரிந்துக் கொண்டும், தான் செய்த கேவலமான குற்றத்திற்கு தண்டனை உறுதி என்று தெரிந்து பயத்தின் உச்சத்தில் கதறி துடிக்கும் விபச்சாரன் சீமான். அய்யோ எங்க அண்ணனை விபச்சாரன் என்று எப்படி சொல்லலாம் என்று அலறிக்கொண்டு எங்களை திட்ட கெட்ட வார்த்தை தேடாதீர்கள். 'சீமான்' என்ற சொல்லே நிகழ்கால அரசியல் சூழலில் மாபெரும் கெட்ட வார்த்தைதான்! தந்தை பெரியார் பேசாத பல கருத்துகளை அவர் பேசியதாக சொல்லிக் கொண்டு திரியும் கூட்டமே, அதில் உண்மையாக அவர் சொன்ன ஒன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பெண் விபச்சாரி என்றால் அந்த ஆணுக்கு பெயர் "விபச்சாரன்" தானே என்றார். விரும்பிய பெண்ணை கிஞ்சித்தும் அறமின்றி பேசும் 'விபச்சாரன் சீமான்'. பொது வெளியில் இதுபோன்ற ...

சீமான் வழக்கு இடைக்கால தடை வழங்கியது உச்சநீதிமன்றம் !

ஷ்யாம் நியூஸ்  03.03.2025  சீமான் வழக்கு இடைக்கால தடை வழங்கியது உச்சநீதிமன்றம் ! வடஇந்தியாவில் பிரபலமாக இருக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரை களமிறக்கி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வழக்கு இடைக்கால தடை வாங்கி உள்ளார். நடிகை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு தடைக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு இன்று விசாரிக்கப்பட்டது. சீமானுக்கு எதிராக நடிகை கொடுத்த பாலியல் வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் கலந்து பேசி உடன்பாடு காண அறிவுறுத்தி, 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் .உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சீமானுக்கு சாதகமாக உத்தரவு வர அவரின் வழக்கறிஞரின் வாதம் முக்கிய காரணம் ஆகும். வடஇந்தியாவில் பிரபலமாக இருக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரை களமிறக்கி நா...

அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000.! உதயநிதி ஸ்டாலின் !

 SHYAM NEWS 03.03.2025 அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000.! உதயநிதி ஸ்டாலின் ! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராகி வருகிறது. தற்போது தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பலருக்கு வழங்கப்படாததால் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த நிலையில் மே மாதத்திலிருந்து அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதனை உறுதி செய்வதுபோல பேசியிருக்கிறார் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின். மேலும் பட்ஜெட் தாக்கலின் போது இந்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

கடின உழைப்புக்கு முழு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்” - முதல்வர்!

 SHYAM NEWS 02.03.2025 கடின உழைப்புக்கு முழு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்” - முதல்வர்! 2024 - 25ஆம் கல்வியாண்டிற்கான 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணவ - மாணவிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டின் 12ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவச்செல்வங்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே நாளை (03.03.2025) மற்றும் மார்ச் 5 (05.03.2025) அன்றும் தொடங்க இருக்கின்றன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ - மாணவியர்களும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 மாணவ - மாணவியர்களும்தேர்வெழுதவுள்ளனர். கடந்த ஒராண்டுகாலமாக மாணவச்செல்வங்களாகிய உங்களுக்கு உங்களது பெற்றோர்கள். ஆசிரியர்கள் உங்களது கல்விக்கு மிகுந்த உறுதுணையாகவும்,  தூண்டுகோலாகவும் இருந்து வழி நடத்தியிருப்பார்கள். அவர்களது  அரவணைப்பில் நீங்கள் பொதுத்தேர்வினை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பீர்கள். இப்பொதுத்தேர்வுகள் உங்களது உயர்க்கல்விக்கும், வாழ்க்கைக்கும் மிக முக்கிய...

கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.அ தி மு க கலந்துகொள்வதால் மகிழ்ச்சி -முதல்வர்

ஷ்யாம் நியூஸ்  02.03.2025   கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.அ தி மு க கலந்துகொள்வதால் மகிழ்ச்சி -முதல்வர்  2026ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி  நேற்று (28.12.2025) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 2 பேர் கலந்து கொள்வார்கள். அந்த 2 பேரும் அதிமுகவின் நிலைப்பாட்டை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்துச் சொல்வார்கள்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினின்  72ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பிரதமரே, எங்களுக்கு எழுத்து...

சீமான் பேசியதை தமிழிசை ஆதரிக்கிறாரா? காங். எம்பி கேள்வி

 SHYAM NEWS 01.03.2025 சீமான் பேசியதை தமிழிசை ஆதரிக்கிறாரா? காங். எம்பி கேள்வி பெரியார் குறித்து ஆதாரமில்லாத கருத்துகளை சீமான் பேசிய போது அவர் எங்கள் தீம் பார்ட்னர் என சொன்ன தமிழிசை சவுந்திரராஜன் இப்போது சீமான் பொதுவெளியில் பெண்கள் குறித்து அநாகரீகமாக பேசியுள்ளாரே அதை ஆதரிக்க போகிறாரா என மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை எம்பி சுதா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தான் ஒரு மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல அநாகரீகமான மனிதர் என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் சீமான். பெண்கள் தொடர்பாக பொதுவெளியில், அயோக்கியர்கள் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார். முதலில் இந்த வழக்கு அரசியல்ரீதியான வழக்கு என்ற வாதமே பொய். சீமான் மீது ஒரு நடிகை புகார் தருகிறார்; நீண்ட நாட்களாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கை ரத்து செய்யுங்கள் என சீமானேதான் நீதிமன்றம் சென்றார். உள்நோக்கம் கற்பிக்கும் சீமான் விசாரணை முடிவில், புகாரில் முகாந்திரம் இருப்பதை அறிந்து 12 வாரத்திற்குள் விசாரிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இப்போது நீ...

தூத்துக்குடி சார் பதிவாளருக்கு தண்டனை!

 SHYAM NEWES 01.03.2025 தூத்துக்குடி சார் பதிவாளருக்கு  தண்டனை! தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவருடைய மகன் ஜோதிமணி (வயது 66), விவசாயி. இவர் கோரம்பள்ளம் பகுதியில் தனக்கு சொந்தமான 3.87 ஏக்கர் நிலத்தை பிளாட் போட்டு விற்பனை செய்து வந்தார். இதற்காக கடந்த 21.9.2006 அன்று ஜோதிமணி 2 பிளாட்டுகளை விற்பனை செய்தார். அதனை மேலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக, சார் பதிவாளராக இருந்த தூத்துக்குடி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 74 வயதாகும் சின்னத்தம்பியை (அன்றைக்கு 56 வயது) அணுகினார். அப்போது சார்பதிவாளர் சின்னத்தம்பி, 2 பிளாட்டுகளையும் பதிவு செய்வதற்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து ஜோதிமணி, தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். பின்னர் 22.9.2006 அன்று பத்திரப்பதிவுக்கு ஜோதிமணி சென்றுள்ளார். அங்கு சார் பதிவாளர் சின்னத்தம்பியிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கையும், களவுமாக சின்...

ஏப்.,1 முதல் பெட்ரோல் கிடையாது! டெல்லியில் இருந்து வெளியான அறிவிப்பு

 SHYAM NEWS 01.03.2025 ஏப்.,1 முதல் பெட்ரோல் கிடையாது! டெல்லியில் இருந்து வெளியான அறிவிப்பு! வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 15 ஆண்டு பழைமையான வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது என்று டெல்லி அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகப்படியான காற்று மாசு ஏற்பட்டு வரும் சூழலில் அதனை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு என்பது நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது தலைநகர் டெல்லியில் காற்று மாசு என்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் டெல்லியில் மக்கள் வசிக்க முடியாத நிலை என்பது ஏற்படும். தற்போது டெல்லியில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆண்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியை பாஜக வீழ்த்தி அரியணை ஏறியது. தற்போது டெல்லியில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. டெல்லி முதல்வராக ரேகா குப்தா செயல்பட்டு வருகிறார். சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மன்ஜிந்தர் சிங் சிர்சா இருக்கிறார். இந்நிலையில் தான் டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதை குறைப்பது தொடர்பாக இன்று அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது காற்று மாசுவை குறைக்க வலுவான நடவடிக்கையை எடுக்க ...