ஷ்யாம் நீயூஸ் 29.09.2023 தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ராத்திரி நேரத்து பூஜை....! நடைபெற்றது தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் இரவு சுமார் 7.30 மணி அளவில் காவல் நிலையத்தின் மையப் பகுதியில் ஐயர் வரவழைக்கப்பட்டு மணி அடித்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு காவல் அதிகாரிகள் அனைவரும் பக்தி பரவசமாக ஒற்றுமையாக சாமி கும்பிட்டது பார்க்க பரவசமாக இருந்தது பின் இனிப்பு பாயாசம் வழங்கி பக்தி பரவசமாக வழிபாட்டை முடித்தனர். ஆனால் அரசு அலுவலகங்களில் இது போன்று மத சார்பு நிகழ்ச்சி நடத்தலாமா? என்ற கேள்வியும் எழுந்தது. ஒரு மதம் சார்ந்த வழிபாட்டுகளை அரசு அலுவலகத்தில் நடத்துவது இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிரான செயலாகாதா? அரசு அதிகாரியாக பணியில் இருப்பவர், தன்னுடைய மதம், சாதி போன்றவற்றை பொது இடத்தில் பரப்புவது, ஆதரித்துப் பேசுவது அரசு அலுவலர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானதுதாகாதா?அரசு அலுவலர்களின் இதுபோன்ற ஒரு குறிப்பிட்ட மத வழிப்பாட்டை பொது இடத்தில் நடத்தினால் பொது நிர்வாகம் மதசார்பற்ற தன்மையோடு நடுநிலையாக இயங்குவது என்பது சந்...