ஷ்யாம் நீயூஸ் 27.06.2023 தூத்துக்குடி டாஸ்மாக் கடை பணியாளர்கள் பணி மூப்பு பட்டியல் வெளியீடு! தமிழ்நாடு வாணிப கழகம் இயக்குனர் 22.6.2023 உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 142 கடைகளில் 16 கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டது.மேற்படி மூடப்பட்ட கடைகளில் பணியாற்றி வந்த பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் விதமாக பணி மூப்பு பட்டியலை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முருகன் தகவல் பலகையில் 27.06.2023 அன்று பணியாளர்கள் பார்வைக்கு வைக்க உத்தரவிட்டார்.மற்றும் இரு தினங்களுக்குள் மேற்படி பணி மூப்பு பட்டியலில் பணி மூப்பு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் உரிய ஆவணங்களை சமர்பித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.