ஷ்யாம் நியூஸ்
22.01.2021
தூத்துக்குடியில் வேளாண்மை சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் !
வேளாண்மை சட்டத்தை இயற்றிய மத்திய அரசை எதிர்த்தும் அதற்க்கு ஆதரவு கொடுத்த அ திமுக அரசை கண்டித்தும் தூத்துக்குடி விடுதலை சிறுத்தைகள் கட்சினர் நேற்று மாலை தூத்துக்குடி வி வி டி சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
வேளாண்மை தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது .எனவே குறைந்த பட்ச ஆதார விலை சட்டத்தை தமிழக அரசே இயற்றவேண்டும் .மாநில உரிமைகளை பறிக்கும் செயலை மைய அரசு கைவிடவேண்டும் .வேளாண் விரோத திருத்த சட்டம் மூன்றையும் ரத்து செய்ய வலியுறுத்தியம் விடுதைலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழகம் எங்கும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நேற்று தூத்துக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கா .மை .அகமது இக்பால் தலைமை தாங்கினார் . வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான் மற்றும் தொகுதி செயலாளர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்கள் பலர் கலந்துகொண்டனர் .