ஷ்யாம் நியூஸ்
28.01.2021
ஜனவரி 30ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அறிவிப்பு!
காந்தி இறந்த தினமா ஜனவரி 30ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டம் நடத்தவும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 ம் தேதியில் தேசிய பாப்புலர் ஃபிடண்ட் தினமாக கொண்டாடி வருகிறார்கள் அது போன்று இந்த ஆண்டும் அன்றைய தினத்தில் கொடியேற்றி நல திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக ஒற்றுமை பேரணி மற்றும் பொது கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மற்றும் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில்
நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மாவட்ட தலைவர் திப்பு சுல்தான் கூறுகையில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்தி வருகிறது விவசாயிகளுக்கு எதிரான வேளாண்மை சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான குடியுமை சட்டங்கள் போன்றவற்றை நிறைவேற்றி செயல்படுவது டன் மட்டும் அல்லாமல்
அறவழியில் போராடும் மக்கள் மீது வன்முறையை ஏவிவிட்டு அடக்குமுறையை
கையாளுகிறது மற்றும் காந்தியை சுட்டு கொன்ற ஆர் எஸ் எஸ் சிந்தனை வாதி கோட் சேவை நிரபராதி போன்று வரலாற்றை மாற்றி எழுத முயற்சி செய்து வருகின்றனர் என்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அரசியஅரசியல் கட்சி அல்ல வரும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிக்காது என்றும் தெரிவித்தார் உடன் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.