ஷ்யாம் நியூஸ்
24.12.2020
அதிமுகவை நிராகரிப்போம் பிரச்சார பயணத்தை தொடங்கினார் தூத்துக்குடி தி. மு. க, எம் எல் ஏ கீதா ஜீவன் !
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் திமுகவின் பிரசார பயணம் துவங்கி நடைபெற்று வருகிறது.இதன்படி நேற்று மாலை தூத்துக்குடியில் விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கீதாஜீவன் எம்எல்ஏ தனது பிரசாரத்ததை தொடங்கினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி 7வார்டுகளில் பிரச்சார பயணம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் தூத்துக்குடி எம்.எல்.ஏயுமான கீதாஜீவன், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போத்தி விநாயகர் கோவிலி தொண்டர்களோடு சுவாமி தரிசனம் செய்த பின்னர் பிரசாரத்தை தொடங்கினார்.
மேலும் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, கீதாஜீவன் எம்.எல்.ஏ., பேசியதாவது, கடந்த 10ஆண்டு காலமாக தூத்துக்குடி மாநகராட்சியில் எந்த பணிகளும் முறையாக நடக்கவில்லை. இதனால் மாநகராட்சியே சீர்குலைந்து போய் கிடக்கிறது. மாவட்டத்தில் மழை விட்டு பல நாட்களாகியும் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் இன்னும் தேங்கி கிடந்து மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுபோன்று மாநகரம் முழுவதும் தரமற்ற எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் சரியாக எரியாத காரணத்தினால் மாநகரம் முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்க பொதுமக்கள் தினம்தினம் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற நிலையால் மாநகர மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இதற்கு முடிவு காணவேண்டுமெனில் திமுக ஆட்சி அமைந்திட வேண்டும். வரும் தேர்தலில் மக்கள் அனைவரும் அதிமுகவிற்கு சரியான பாடம் புகட்டிடவேண்டும். தூத்துக்குடி மட்டுமல்லாது தமிழகமே வளர்ச்சியுடன் மாற்றம் கண்டிட மக்கள் அனைவரும் எங்களுக்கு பேராதரவு தந்திடவேண்டும் என்றார். முன்னதாக 7வார்டில் வீடுகள் தோறும் சென்று மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை கொடுத்து ஆதரவு திரட்டினர்.
இதில், மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன்செல்வின், அவைத்தலைவர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், மாநகர துணை செயலாளர் கீதாமுருகேசன், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர், மாநகர தொண்டரணி முருகஇசக்கி, மருத்துவர் அணி அமைப்பாளர் அருண்குமார், தகவல்தொழில்நுட்ப அணி அந்தோணி கண்ணன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.