ஷ்யாம் நியூஸ்
22.12.2020
தினமும் எகிறும் கேஸ் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் நேற்று கனிமொழி எம்.பி தலைமையில் தி மு க மகளிர் அணி ஆர்ப்பாட்டம் நடத்தினர் .கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிலிண்டருக்கு 100 ரூபாய் உயர்த்தியுள்ளது மத்தியரசு இதற்க்கு தி மு க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் .தூத்துக்குடியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கேஸ் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர் இதில் கலந்துகொண்ட தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி தலைவருமான கனிமொழி கருணாநிதி பேசுகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கேஸ் விலையை 100 ரூபாய் உயர்த்தியுள்ளது மோடி அரசு இது கொரானா காலத்தில் வருமானம் இல்லாமல் இருக்கும் குடும்பங்களின் பெண்கள் தலையில் பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது .உலக சந்தையில் பெட்ரோல் ,டீசல், கேஸ் விலை குறைந்து உள்ளது ஆனால் பிஜேபி அரசு விலையை குறைக்காமல் மக்களை வஞ்சித்து வருகிறது .இதையெல்லாம் தட்டி கேட்கவேண்டிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு தலையாட்டி பொம்மையாக இருப்பதோடு இல்லாமல் முதியோர் உதவி பணம்நிறுத்தம் ,நீட் தேர்வு ,வேலைவாய்ப்பு,விவசாயிகளுக்கு எதிரான வேளாண்மை மசோதாக்கு ஆதரவு என பல்வேறு வழியில் தமிழக உரிமைகளை பலிகொடுத்து வருகிறார் .பதவி இருந்தால் போதும் என்று எடப்பாடி பழனிசாமியால் மத்திய அரசுக்கு அடகு வைக்கப்பட்ட உரிமைகளை மீட்கவேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை .வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஆதரவோடு திமுக வெற்றிபெறும் தலைவர் ஸ்டாலின் தலமையில் இழந்த நமது தமிழக உரிமைகள் மீட்கப்படும் என்றும் தெரிவித்தார் .ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் தூத்துக்குடி திமுக எம் எல் ஏ கீதா ஜீவன் ,தெற்கு மாவட்ட செயலாளர் திருச்செந்தூர் தொகுதி எம் எல் ஏஅனிதா ராதாகிருஷ்ணன் ஓட்டப்பிடாரம் தொகுதி எம் எல் ஏ சண்முகையா மற்றும் தி முக மகளிர் அணியினர் கலந்துகொண்டனர் .