ஷ்யாம் நியூஸ்
மரணம் இலவசம் ?தூத்துகுடியின் அவலம் !சந்தோஷத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ?
தூத்துக்குடியில் சிலநாட்களுக்கு முன்பு இரண்டு நாள் பெய்த மழையில் நகரின் அணைத்து பகுதிகளும் மரண குழிகளாகவும் சாக்கடை கலந்த நீராகவும் பாசிபடிந்து பார்ப்பதற்கே அருவருப்பாக பலப்பகுதிகள் காணப்படுகிறது மற்றும் மேடான பகுதிளில் சாலைகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது காற்றின் வேகத்தில் தூசும் குருமணலும் பொதுமக்கள் மீது அள்ளி வீசுகிறது இதனால் தூத்துக்குடி நகர பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மூச்சு திணறலுக்கும் ஆளாகி உள்ளனர் .
கடந்த ஆண்டுகளில் சுமார்ட் சிட்டி திட்டத்திக்காக தூத்துக்குடிக்கு 995 நிதி ஒதுக்கியதாக தூத்துக்குடி வந்த முதல்வர் பழனிசாமி தெரிவித்தார் .ஆனால் தூத்துக்குடி நகரின் ஏற்கனவே சில இருந்த சில பூங்காக்களை சீரமைத்து மின்கோபுர விளக்குகள் அமைத்து உள்ளனர் மற்றபடி எந்த உள்கட்டமைப்பு பணிகளும் முறையாக நடைபெறவில்லை .ரோடு போடுவதுபோல சாலைகளை அமைத்து பின்னாடியே ஏதாவது காரணம் கட்டி சாலைகளை தோண்டுவது என்று நன்கு எழுதுகொண்டஒரு ஒப்பந்த நிறுவனம் தொடந்து
செய்துகொண்டு வருகிறது .மழைக்காலம் வரும் என்றும் தெரிந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி இருந்தது என்றும் மழையை காரணம் காட்டி தரம் இல்லாமல் போட்ட சாலைகளை மறைப்பதற்கான வேலைகள் நடைபெறுகிறது .நகரின் பெருபாலான சாலைகள் மரண பள்ளத்தாக்குகள் போல் உள்ளது என்றும் இரண்டு சக்ர வாகன ஓட்டிகள் கீழே விழுவதும் உயிர் இருந்தால் மீண்டும் எழுந்து போவதுமாய் உள்ளனர் .அதிலும் இருசக்கர வாகனம்ஓட்டும் பெண்கள் படும் பாடு சொல்வதற்கு இல்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகள் இது பற்றி கவலை இல்லாமல் வரும் நாட்களில் இதன்பேரில் நிறைய வேலைகள் டெண்டர் விடப்படும் என்பதால் சந்தோசமாக இருக்கின்றனர் .இப்பொது மாநகராட்சி அதிகாரிகள் எமதர்மனின் ஏஜெண்டுகளாக உள்ளதால்தான் போர்க்கால அடிப்படியில் சாலைகளை சீரமைக்காமல் உள்ளனர் என்றும் தூத்துக்குடி இப்படி ஒரு அவலத்தை சந்திக்கும் என்று எதிர்க்கவில்லை என்றும் தெருக்கள் முழுவதும் தண்ணீரில் மிதப்பதால் குளிர் மற்றும் கொசுக்கடியால் தூங்கி பலநாட்கள் ஆகிறது என்றும் பொதுமக்கள் தங்கள் மணக்குமுறலை கொட்டித்தீர்த்தனர் .