தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தனி கிராமம் காலான்கரை.இக்கிராமம் தூத்துக்குடி பாளை பிரதான சாலையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளத்து க்கரை ஓரமாக உள்ளது. இங்குள்ள இளஞசர்கள் கபடி விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பல ஊர்களில் இருந்து வரும் கபடிகுழக்கள் காலான்கரை கிராமத்தில் நடைபெறும் கபடி போட்டியில் கலந்துகொண்டு விளையாடுவது வழக்கம்.அனால் சரியான விளையாட்டு மைதானம் இல்லாமல் உள்கட்டமைப்பு இல்லாமல் கபடி தவித்து வேறு விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் இளஞசர்களும் குழந்தைகளும் பொதுமக்களும் தவித்து வந்தனர்.மற்றும் விளையாட்டு மைதானம்
வேண்டி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.பின்தங்கிய கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும்விதமாக கோரம்பள்ளம் 1 கிராம நிர்வாக அதிகாரி ராஜலெட்சுமி
விளையாட்டு மைதாத்திற்கான் இடத்தையும்
அனுமதி கடிதத்தையும் ஊராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்தார்.அதன் அடிப்படையில் காலான்கரை கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமையவுள்ள இடத்தை தூத்துக்குடி உதவி ஆட்சியர் (பயிற்சி) தாசில்தார் செல்வகுமார் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தனர்.