ஷ்யாம் நியூஸ்
26.09.2020
தூத்துக்குடி டாஸ்மாக் கடையில் 1.86கோடி கையாடல் சிபிசிஐடி விசாரணை நடத்த ஏஐடியுசி கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் டாஸ்மாக் கடையில் அதிக வருவாய் உள்ள கடைகளில் ஒன்று ஆறுமுகநேரியில் உள்ள 9991 எண் கடையாகும் .இந்த கடைக்கு பணிபுரியவேண்டும் என பல பணியாளர் போட்டி போட்டுக்கொண்டு கையூட்டு கொடுத்து அதிகாரிகளுடன் துணையோடு பணியாற்றி வந்தனர்.இந்த கடையில் தினமும் 7லட்சம் வரை மது விற்பனை நடைபெறும்.விற்பனை பணத்தை மருநாள் வங்கியில் செலுத்தி வரவேண்டும்.மற்றும் ஒவ்வொரு மாதமும் தணிக்கை செய்யும் அதிகாரிகள் தணிக்கை செய்து சான்று வழங்குவர்.இந்த நிலையில் 31.08 2020 தணிக்கை செய்த அதிகாரிகள் கடை இருப்பு மதுபாணத்திற்க்கும் வங்கியில் செலுத்திய மதுபாண விற்பனை பணத்திற்க்கும் 1.86கோடி வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் அந்த கடையின் ஊழியர் ஒருவர் தற்கொலைக் முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .மற்றோருவர் டாஸ்மாக் மேலாளர் துணையுடன் தற்போது கடையை நடத்திவருகிறார் என கூறப்படுகிறது.இது குறித்து ஏஐடியுசி டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் கூறும்போது கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தூத்துக்குடி டாஸ்மாக் நிர்வாகம் ஊழலில் சீரழிந்து வருகிறது ஆறுமுகநேரி டாஸ்மாக் கடையில் மாவட்ட மேலாளர் தூணை மேலாளர் உடந்தையுடன் ரூபாய் 1.86 கோடி அரசு பணம் கையாடல் செய்யப்பட்டுயிருப்பது வேதனைக்குரியது.விற்பனை பணம் ஆயிரம் குறைந்தாலே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் இந்த விஷயத்தில் கண்டும் காணாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.எனவே இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலிஸ் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை ஏஐடியுசி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.