தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பிறந்தநாள் விழா. அதிமுக உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஷ்யாம் நியூஸ்
10.09.2020
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பிறந்தநாள் விழா. அதிமுக உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் அவருக்கு கேக் வெட்டி மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞரணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி யில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு, தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி இளைஞரணி பகுதி செயலாளர் திருச்சிற்றம்பலம் தலைமையிலான நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞரணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு எஸ்பி சண்முகநாதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர்.