ஷ்யாம் நியூஸ்
20.07.2020
நாசரேத் திருமண்டல பேராலயத்தில் நான்கு பேர் தற்கொலை முயற்சி?
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராலயத்தில் அகஸ்டின் என்பவர் ஆலய ஊழியராக சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். அங்கு நடக்கும் அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.நாசரேத் மக்கள் பேராயரைப் பார்த்து அவரை பணியில் சேர்க்க வேண்டும் என்று தூத்துக்குடி வந்தபோது பேராயர் அவர்களைப் பார்க்க மறுத்துவிட்டார்.இன்று அந்த சபை ஊழியர் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஆலய கோபுரத்தின் உச்சியில் இருந்து கொண்டு தற்கொலை செய்யப் போவதாக கூறி வருகிறார்.
நாசரேத் சபை மக்கள்குருவானவர்கள் செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகள் சம்பந்தமாக பல புகார்கள் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் நிர்வாக கைக்கூலியாக செயல்பட்டு வந்த காரணத்தினால் தான் இந்த சம்பவம் நடைபெறுகிறது என்று சபை மக்கள் தெரிவித்து வருகிறார்கள். இனிமேலாவது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்றும்?
சடலத்தை வைத்து பணம் சம்பாதித்து ஊழல் செய்யும் இந்த நிர்வாகம் தற்போது மக்களின் ரத்தத்தை குடிக்கவும் தயாராகி விட்டது எனவும் சில சபை உறுப்பினர்கள் தங்கள் கோபத்தை பதிவு செய்தனர்.
காவல்துறை விரைந்து செயல்பட்டு நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்யப் போவதாக கோபுரத்தில் நிற்க்கும் நான்கு உயிரையும் உடனே காப்பாற்ற வேண்டும் எனவும் திருமண்டல சபை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.