தூத்துக்குடில் அரசு பள்ளிக்கூடம் இடம் விற்பனை?பஞ்சாயத்து தலைவி கணவர் அட்டகாசம் !வருவாய்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
தூத்துக்குடில் அரசு பள்ளிக்கூடம் இடம் விற்பனை? பஞ்சாயத்து தலைவி கணவர் அட்டகாசம் !வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தனி கிராமம் காலாங்கரை இங்கு 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது பஞ்சாயத் யூனியன் துவக்க பள்ளி இங்கு 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ளது கடந்த முறை பஞ்சாயாத்து தலைவராக இருந்த தெய்வநாயகம் முயற்சியால் இப்பள்ளியின் முன்பக்கம் கோட்டைசுவர் கட்டி சுகாதாரமான வளாகத்தை உருவாக்கினார் .தற்போது மீதம் உள்ள பின்பக்க கோட்டை சுவர் கட்டி பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்ய தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் பி டீ ஓ மற்றும் அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டது .ஆனால் பள்ளிக்கு சொந்தமான இடங்களை சில தனியார் ஆக்கிரபிப்பு செய்துகொண்டு ஆக்கிரமிப்பு இடங்களை காலிசெய்து கொடுக்காமல் பஞ்சயாத்து ஊழியர்களை மிரட்டி வருகின்றனர் இதனால் அக்கிரமிப்பு இடங்களை அகற்றாமல் பெயரளவிற்கு கட்டுமானம் கட்ட தயாராகி வருகின்றனர் .தற்போது உள்ள பஞ்சயாத்து தலைவி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்துகொண்டு களப்பணிக்கு செல்வது இல்லை பெயரளவிற்கு பஞ்சாயத்து தலைவியாக இருக்க வைத்து விட்டு
அவரது கணவர் முழு அதிகாரத்தியும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு செயல்படுவது மட்டும் அல்லாமல் அப்பகுதி வருவாய் அதிகாரி கிராம நிர்வாக அதிகாரியிடம் தகவல் தெரிவித்து இடத்தை அளக்கமால் தன்னிச்சையாக ஆக்கிரமிப்பு நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசு இடத்தை கைமாற்றி உள்ளார் என்றும் மற்றும் கட்டுமான மதிப்பிட்டு பலகை ,ஒப்பந்ததாரர் பெயர் ,கட்டுமானத்தின் கால அளவு, மேற்பார்வை அதிகாரி பெயர் என எந்த தகவல்பலகையும் இல்லை என்றும் .அதன் விளைவாக பள்ளிக்கூட இடத்தின் அக்கிரமிப்பை அகற்றாமல் இருக்க பணம் பெற்றுக்கொண்டு கோட்டைசுவர் கட்ட கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் அனுமதி அளித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர் .ஆகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி பள்ளியின் கோட்டை சுவர் கட்ட பி டீ ஓ மற்றும் பஞ்சாயத்து செயலர் ,வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர் .