ஷ்யாம் நியூஸ்
18.02.2019
ஸ்டெர்லைட் அரக்கனிடம் இருந்து தூத்துக்குடி மக்களுக்கு விடுதலை ?
ஸ்டெர்லைட் திறக்க அனுமதி இல்லை என்ற உச்சநீதிமன்ற உத்தரவால் தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும் தூத்துக்குடி வட்டார பொதுமக்களும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர் .மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர் .22 ஆண்டுகளாக நடந்த போராட்டத்தில் மே 22 2018 அன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர் . ஆலை நிர்வாகத்தால் வெளி ஊர்களில் சம்பளத்துக்கு ஆள்பிடித்து ஸ்டெர்லைட் திறக்கவேண்டும் என வாரம் வாரம் ஆட்சித்தலைவரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்து வந்தனர் .இதனால் ஸ்டெர்லைட் எதிர்பாளர்களிடம் ஒருவிதமான அச்சம் இருந்துகொண்டு இருந்தது ஆனால் மாவட்ட ஆட்சி தலைவர் திரு சந்தீப் நந்தூரி பொதுமக்கள் யாரும் ஸ்டெரிலைட் ஆலை திறந்துவிடுவார்கள் என்று அச்சமோ பயமோ கொள்ளவேண்டாம் என்று தொடர்ந்து கூறிவந்தார் .அதுபோல் இன்று ஆலை திறக்க அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதால் தூத்துக்குடி மக்கள் முகத்தில் சந்தோச ரேகை பரவி உள்ளது .மற்றும் இன்று ஸ்டெர்லைட் நச்சு அரக்கனிடம் இருந்து தூத்துக்குடி மக்களுக்கு விடுதலை கிடைத்து கிடைத்திருப்பதாகவும் இந்த விடுதலை தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர் .ஆனால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் பணம் வாங்கிக்கொண்டு தவறான தகவலை வெளியிட்டவர்களுக்கும் விளம்பர நிறுவங்களுக்கும் கமிஷனுக்கு ஆள்பிடித்த தரகர்களுக்கும் மிக பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் மக்கள் கருது தெரிவித்தனர் .ஆனால் அரசியல் ரீதியாக முதன்முதலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது துணை செயலாளர் டி டி வி தினகரன் ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக தூத்துக்குடில் பெரும் கண்டன போராட்டம் நடத்திய பின்புதான் வேறு வழியில்லாமல் மற்ற அரசியல் கட்சிகள் ஆலைக்கு எதிராக கண்டன குரல் கொடுத்தனர் .இந்த வெற்றி மக்கள் போராட்டத்தினாலும் மாவட்ட ஆட்சித்தலைவர் மிக சரியாக செயல்பட்டதாலும் கிடைத்து உள்ளது அனால் இன்று பல அரசியல் கட்சிகள் தங்களால் கிடைத்தது என்று இனிப்புகள் வழங்கி வாக்கு அரசியல் செய்வதாகவும் மக்கள் குற்றம் சாட்டினார் .
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்