ஷ்யாம் நீயூஸ்
01.12.25
காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தக்கூடாது. டாஸ்மாக் பணியாளர் சங்கம் கூட்டமைப்பு கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில் காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களே திரும்பப் பெற வேண்டும் என்ற திட்டத்தினை ஏற்க மறுத்து தூத்துக்குடியில் அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட மேலாளார் ஐயப்பனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் நிர்வாகத்தால் நியமிக்கப்படும் காலி பாட்டில் எடுக்கும் ஏஜென்ட், பார் ஒப்பந்ததாரர்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் காலி பாட்டில் சேகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் கடை பணியாளர்களை எந்த நிர்பந்தமும் செய்யக்கூடாது.
காலி பாட்டில் திரும்ப பெரும் ஒப்பந்ததாரர் அல்லது பார் உரிமையாளர் அந்தந்த கடை எண் உள்ள ஸ்டிக்கர்களை கடை பணியாளர்களிடம் ஒப்படைத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்.
பார் ஒப்பந்ததாரர் அன்றைய தினத்தில் வழங்கும் ஸ்டிக்கருக்கான தொகையினை மறுநாள் கடை திறந்த பின்பு வழங்கப்படும்.
காலி பாட்டிலிக்கான ரூபாயை ஒப்பந்ததாரர் அல்லது பார் உரிமையாளரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகையை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்.
பார் உரிமையாளர் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஆள் நியமித்து வேலை செய்தால் அதற்கான ஊதியத்தை கடைப்பணியாளர்களிடம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது.
பார் இல்லாத கடைகளுக்கு ஒப்பந்ததாரர்களே ஆள் நியமித்து பாட்டிலை பெற்றுக் கொள்ள வேண்டும்
ஆள் பற்றாக்குறை உள்ள கடைகளுக்கு பணியாளர்களை நியமித்து பணி நிறைவு செய்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை
வலியுறுத்தி மனு அளித்தனர். கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட மாவட்டம் மேலாளர் காலி பாட்டில் திரும்ப வரும் திட்டத்தில் ஏற்படும் குறைபாடுகளுக்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்றுக் கொள்ளும் என்றும் உறுதி அளித்தார். ஆனால் தொழில் செய்ய கூட்டமைப்பு எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நாளை முதல் (02.12.25) காலி பாட்டில் திரும்பப் பெறும். திட்டம் நடைபெற உள்ளதாகவும் மாவட்ட மேலாளர் கூட்டத்தில் தெரிவித்தார்