முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

தூத்துக்குடியில் அட்டகாசம்!அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்; ஊழியர்களின் மண்டை உடைப்பு

 ஷ்யாம் நியூஸ்  21.04.2025 தூத்துக்குடியில் அட்டகாசம்அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்; ஊழியர்களின் மண்டை உடைப்பு - தூத்துக்குடியில் அட்டகாசம் தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் இசக்கிராஜாவின் பிறந்தநாள் விழா தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல தென் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் தூத்துக்குடிக்கு வருகை தந்து கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து அனைவரும் திரும்பி செல்லும் போது தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள வாகைகுளம் டோல்கேட்டில் அவர்கள் சென்ற கார்களை டோல்கேட் பணியாளர்கள் நிறுத்தி டோல்கேட் கட்டணம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது. இதையடுத்து கார்களில் வந்த 50-க்கும் மேற்பட்டோர் கும்பலாக சேர்ந்து டோல்கேட் ஊழியர்களை சரமாரியாக தாக்கி டோல்கேட்டை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். டோல்கேட் பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் தாக்கி...

தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக 6 லட்சம் மோசடி 6நபர்கள் மீது வழக்கு பதிவு!

ஷ்யாம் நீயூஸ் 18.04.2025  தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக 6 லட்சம் மோசடி 6நபர்கள்  மீது வழக்கு பதிவு ! தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சமத்துவ புரத்தைச் சார்ந்தவர் ஓட்டக்காரன் த/பெ தங்கராஜ் இவர் பாலிடெக்னியில் தொழிற்கல்வி படித்து அரசு வேலைக்காக காத்திருந்தார். இதனை அறிந்த அதே ஊரை சார்ந்த பத்திரகாளி க/ பெ முருகன் அவரை தொடர்பு கொண்டு தான் சென்னை தலைமை செயலகம் மூலம் தூத்துக்குடி மாவட்டம் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அலுவலக உதவி பணியாளர் வேலை வாங்கித் தருவதாக 2022ம் ஆண்டு ரூபாய்  5 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை நான்கு தவணையாக வங்கிக் கணக்கின் மூலமும், ஜிபே மூலமும் வாங்கி   ஏமாற்றியுள்ளனர். ஓட்டக்காரனிடம் போலியாக  பணி நியமண ஆணை   தாயார் செய்து அதன் நகலை ஓடக்காரனிடம் பத்திரகாளி   வழங்கியுள்ளார். மற்றும் ஒரிஜினல் ஆணை தலைமைச் செயலகத்தில் இருந்து விரைவில் வரும் என்று கூறி இந்த பண மோசடி வசூலில் பத்திரகாளி உட்பட குமரேசன் த/பெ பாண்டியன், விருதுநகரை சேர்ந்த தேவேந்திரன் த/பெ சுந்தரம் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தனக்கு ஒ...

தமிழ்நாடு பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு.நாடார் சங்கம் மேல் முறையிடு செய்ய ஆலோசனை !

  SHYAM NEWS 17.04.2025 தமிழ்நாடு பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க வேண்டும்  உயர்நீதிமன்றம் உத்தரவு.நாடார் சங்கம்  மேல் முறையிடு செய்ய ஆலோசனை ! தமிழ்நாடு முழுவதும் உள்ள சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கத் தவறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அந்தச் சங்க நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளை ரத்து செய்து, சங்கத்துக்கான தேர்தல் நடவடிக்கைகளை தொடர அனுமதி அளிக்க அந்த வழக்கில் கோரப்பட்டிருந்தது. அதேபோல, திருச்செங்கோடு வட்டக்கொங்கு வேளாளர் சங்கம், தி புவர் எஜுகேஷனல் ஃபண்ட் ஆகியவற்றின் சார்பில் வெவ்வேறு கோரிக்கைகளோடு வேறு சில வழக்குகளும் தொடரப...

தூத்துக்குடி ஊராட்சியின் உள்ளாட்சி ஊழல் !கட்டு காட்டாக சுருட்டும் அதிகாரிகள் !

 ஷ்யாம் நியூஸ் 10.04.2025  தூத்துக்குடி ஊராட்சியின் உள்ளாட்சி ஊழல் !கட்டு காட்டாக சுருட்டும் அதிகாரிகள் !  தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் திட்டங்களில் பயனாளிகளை தேர்ந்து எடுப்பதில் ஊழல் கிராமங்களில் சாலை அமைப்பதில் ஊழல் கிராமம் தோறும் குடி தண்ணீர் வழங்குவதில் ஊழல் .டெண்டரில் ஊழல்  என ஊழல் மயமான தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் அடாவடிக்கு கடிவாளம் இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் வரி பணத்தை  விரயம் செய்கின்றனர் . கோரம்பள்ளம் பஞ்சயத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அரசு  குடியிருக்க வழங்கிய நிலத்தை விற்பனை செய்தவருக்கு மீண்ட...

தூத்துக்குடி டாஸ்மாக் பணியாளர்கள் ஏ ஐ டி யூ சி சங்கம் கூட்டம் நடைபெற்றது

 ஷ்யாம் நீயூஸ் 10.04.2025 தூத்துக்குடி டாஸ்மாக் பணியாளர்கள் ஏ ஐ டி யூ சி சங்கம் கூட்டம் நடைபெற்றது 10.04.2025 இன்று தூத்துக்குடி அக்குமென் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முருகன் தலைமையிலும் மாணிக்கம் பொருளாளர் முன்னிலையிலும் டாஸ்மாக் பணியாளர்கள் ஏ ஐ டி யூ சி சங்கம்  கூட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன் கருத்துரை வழங்கினார்.ஏ ஐ டி யூ சி  சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் கடைகளில் ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், விற்பனையாளர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற வேண்டும், அனைத்து கடைகளுக்கும் சமமான மது பெட்டிகளை அனுப்பி வைக்க வேண்டும்,சில கடைகளில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட மேற்பார்வையாளர்க்கு பதிலாக நிரந்தர மேற்பார்வையாளர் பணி அமர்த்த வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விரைவில் மாவட்ட மேளாலரை சந்தித்து குறைதீர்க்கும் மணு கொடுக்க முடிவு செய்யப்பட்டது‌

டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்ற நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 SHYAM NEWS 06.04.2025 டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்ற நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  தூத்துக்குடி அருகே உள்ள மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் உப்பள தொழிலாளி இவரை கடந்த 17.9.1999 அன்று வழக்கு விசாரணை ஒன்றிற்காக தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு அப்போது உதவி ஆய்வாளராக இருந்த ராமகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் லாக்கப்பில் வைத்துள்ளனர். இதில் கடந்த 18.9.1999 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் வைத்து வின்சென்ட் மர்மமான முறையில் இறந்தார்.  இதைத்தொடர்ந்து வின்சென்ட் மனைவி கிருஷ்ணம்மாள் என்பவர் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் இருந்த காவல்துறையினர் தனது கணவரை அடித்து கொலை செய்து விட்டதாக புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடைபெற்று இந்த லாக்கப் மரணம் தொடர்பாக காவலர்கள் சோமசுந்தரம், ஜெயசேகரன், ஜோசப் ராஜ், பிச்சையா, செல்லதுரை, வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன், உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு ச...

பிரதமர் மோடி ஓய்வு பெறுகிறாரா? - பரபரப்பு கருத்து!

 SHYAM NEWS 01.04.2025 பிரதமர் மோடி ஓய்வு பெறுகிறாரா? -  பரபரப்பு கருத்து! குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்து வந்த நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற  மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2019 மற்றும் 2024 என அடுத்தடுத்து  நடைபெற்று மக்களவைத் தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி பதவி வகித்து வருகிறார். மற்றொரு புறம் பா.ஜ.க.வில் 75 வயதுக்கு மேல் உள்ளவர் ஆட்சியில் பதவி வகிக்க கூடாது என்ற விதி உள்ளது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பர் 17ஆம் தேதியுடன் 75 வயது நிறைவடைய உள்ளது. இதனால் பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அதே சமயம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு பிரதமர் மோடி நேற்று (30.03.2025) சென்றிருந்தார். பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு பிரதமர் மோடி செல்வது இது முதல் முறையாகும். இந்நிலைய...