ஷ்யாம் நீயூஸ் 25.09.2024 தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் அழைப்பு! தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று செப் -23 திரேஸ்புரம் பகுதி தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் கேக் வெட்டி கொண்டாடினார். அனைத்து மக்களையும் மாநாட்டிற்கு அழைக்கும் விதமாக ஆட்டோகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கினார்.மேலும் பொதுமக்களுக்கு தாகத்தை தணிக்கும் பொருட்டு மோர் வழங்கி சிறப்பித்தார். தூத்துக்குடி தெப்பக்குளம் அருகில் உள்ள truth full எனும் மனநலம் குன்றிய மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது..இந்நிகழ்வு அனைத்தையும் திரேஸ்புரம் தமிழக வெற்றி கழக தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.