முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓய்வு பெற்ற தலையாரி கட்டுப்பாட்டில் தூத்துக்குடி தாலுகா அலுவலகம்!

 ஷ்யாம் நீயூஸ் 20.10.2023 ஓய்வு பெற்ற தலையாரி கட்டுப்பாட்டில் தூத்துக்குடி தாலுகா  அலுவலகம்! தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமம் கோரம்பள்ளம் 1. இக்கிராம அலுவலகத்தில் தலையாரியாக பணியாற்றியவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றுள்ளார்.   ஓய்வா பெற்ற தலையாரி விஏஓ அலுவலகத்தை திறந்து அரசு கோப்புகளை கையான்டு வருகிறார்.இதனால் பொதுமக்கள் ஓய்வுபெற்ற தலையாரி பணியில் உள்ளாரா? என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். தூத்துக்குடி தாலுகா அலுவலகத்துக்கு கட்டுப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் தற்போது தலையாரியின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்கள் யாரை தொடர்பு கொள்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெரியநாயக்கபுரத்தை சேர்ந்த மணி கூறுகையில்  நீண்ட நாட்களாக இந்த ஓய்வு பெற்ற தலையாரி இது போன்று தான் செயல்பட்டு வருகிறார் இவரை யாரும் கட்டுப்படுத்த முடியாத சக்தியாக இருந்து வருவதால் நியாயமான விஷயங்களுக்கு கிராம நிரவாக  அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம் என்று கவலை தெரிவித்தார்

மகளிர் ரூ.1,000 உரிமை தொகை திட்டம் ரத்து செய்ய வேண்டும்? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

ஷ்யாம் நீயூஸ் 16.10.2023   தமிழகத்தில் மகளிர் ரூ.1,000 உரிமை தொகை திட்டம் ரத்து செய்ய வேண்டும்?  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! தமிழகத்தில் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை “கலைஞர் மகளிர் திட்டம்” மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் மேல்முறையீடு விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் “பொருளாதார நிலை பலவீனமாக இருப்பதால் குடும்ப தலைவிகளின் உரிமை தொகை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மனுதாக்கள் செய்துள்ளார்.  இந்த  வழக்கு விசாரணை விரைவில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடியில் மகளிர் உரிமை திட்டம் மேல்முறையீடு செய்ய முடியாமல் மகளிர்கள் தவிப்பு.

 ஷ்யாம் நீயூஸ் 12.10.2023 தூத்துக்குடியில் மகளிர் உரிமை திட்டம் மேல்முறையீடு செய்ய முடியாமல் மகளிர்கள் தவிப்பு. தமிழக அரசால் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்  வழங்கி வருகிறது. இத்திட்டத்திற்க்கு விண்ணப்பித்து  ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் நிராகரிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்திருந்தது . விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட  மகளிர்கள் மேல்முறையீடு செய்ய இ சேவை மையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்  ஆனால் இ சேவை மையங்களில் மேல்முறையிடு செய்யும் லிங்க் வரவில்லை வேலை செய்யவில்லை நாளை வாருங்கள் நாளை மறுநாள் வாருங்கள் என்று பெண்களை அலைய விடுகின்றனர். இந்த மேல்முறையீட்டு மனுவை தூத்துக்குடி தாலுகா அலுவலகங்களில் பதிவு செய்ய மறுத்து வருகின்றனர். வரும் 18ஆம் தேதி கடைசி தினம் என்பாதால் மகளிர்கள் வேலை வெட்டிக்கு செல்லாமல் இதே வேலையாக அலைகின்றனர். எளிதாக மேல் முறையீடு செய்வதற்கு  அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்கு  மேல்மறையீடு செய்ய வந்த மகளிர்கள்  க...

தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு 8ம் தேதி திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் தகவல்

 ஷ்யாம் நீயூஸ் 06.10.2023 தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு 8ம் தேதி திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் தகவல்  தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படும் 53 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது-. அதன் இறுதி கட்டப் பணிகள், வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு பணிகளை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டார்.       பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் தூத்துக்குடி பழைய அண்ணா பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகில் இருந்த போக்குவரத்து கழக பணிமனை ஆகிவற்றை அகற்றிவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் 2 ஆண்டில் வெறும் 10 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு முதலமைச்சர் மு.க.ஸ்ட...

சுற்றுலா தலங்களில் நுழைவு கட்டணம் ரத்து...

SHYAM NEWS 06.10.2023 கொடைக்கானலில் வன உயிரின வார விழாவினை முன்னிட்டு வரும் ஞாயிற்று கிழமை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் நுழைவு கட்டணம் ரத்து உள்ளது வனத்துறை. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வன உயிரின வார விழாவானது கொண்டாடப்படுகிறது, இதனை தொட‌ர்ந்து வன உயிரின வார விழாவை முன்னிட்டு வரும் ஞாயிற்று கிழமை(08.10.2023) வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  மோயர் சதுக்கம்,பைன் மர சோலை,பில்லர் ராக்,குணா குகை, ம‌ன்ன‌வனூர் சூழ‌ல் சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குள் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் ம‌ற்றும் பொதும‌க்க‌ள் செல்ல நுழைவு கட்டணத்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக‌ -வனத்துறை அறிவிப்பு செய்துள்ளது.

கையில் உள்ள பணத்தை ஆடம்பர செலவு செய்து வீணடிக்காதீங்க...’ - ஜெப் பெசோஸ் அபாய எச்சரிக்கை!

 ஷ்யாம் நீயூஸ் 06.10.2023 கையில் உள்ள பணத்தை ஆடம்பர செலவு செய்து வீணடிக்காதீங்க...’ - ஜெப் பெசோஸ் அபாய எச்சரிக்கை! உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கலாம் என்பதால் கையில் உள்ள பணத்தை பொருட்களை வாங்கி வீணடிக்காதீர்கள் என மக்களை எச்சரித்துள்ளார். அது  இது இந்திய மக்களுக்கும் பொருந்தும்.உலகம் முழுவதும் நிலவும் மந்தமான பொருளாதாரம் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற வல்லரசுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. பணவீக்கம் காரணமாக பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்து வருகின்றனர். ட்விட்டர் நிறுவனத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மெட்டாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அமேசானில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என பணி நீக்கங்கள் பற்றி வெளியாகும் தகவல்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக மக்களை எச்சரிக்கும் விதமாக வெளியிட்டுள்ள தகவல் பேரதிச்சியை உருவாக்கியுள்ளது. நெருங்கி வரும் ஆபத்து: அமெரிக்காவில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கடன் மற்றும் க...