முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கத்துறை துறையின் மனுமீது நீதிமன்றம் இன்று முடிவெடுக்கவில்லை.

 ஷ்யாம் நீயூஸ் 19.07.2023 அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் அமலாக்கத்துறை துறையின் மனுமீது நீதிமன்றம் இன்று முடிவெடுக்கவில்லை. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவிற்கு தூத்துக்குடி நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த 2006-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஏப்.19-ம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில், இந்த வழக்கில் எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், " சொத்துக்குவிப்பு வழக்கின் அடிப்படையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள  சொத்துக்களையும் முடக்கியுள்ளது. அத்துடன் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரணைக்கும் அமலாக்கத்துறை அழைத்திருந்தது. இந்த நிலையில் தான், அனிதா ...

அமலாக்கதுறையின் அடுத்த டார்கெட் முட்டையா? மீனா?

ஷ்யாம் நீயூஸ் 18.07.2023 அமலாக்கதுறையின் அடுத்த டார்கெட் முட்டையா? மீனா? சசிகலா புஷ்பா பரபரப்பு பேட்டி!  மேகதாது அணை பிரச்சனை கர்நாடகா அரசுடன் சேர்ந்து தமிழக அரசும் மக்களை வஞ்சிக்கிறது அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்  தூத்துக்குடி பாஜக  அலுவலகத்தில் மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா தலமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்டுவதற்க்கு 9000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறிய காங்கிரஸுடன் சேர்ந்து தமிழக அரசும் மக்களுக்கு எதிராக வஞ்சனை செய்து வருகிறது, இந்த நிலையில் கர்நாடகாவிற்கு தமிழக முதல்வர் சென்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்து கொண்டது தமிழக மக்களுக்கு செய்யும் பெரிய துரோகம் என்றும் சசிகலா புஷ்பா கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்  சத்துணவில் அழுகிய முட்டை வழங்குகின்றனர்‌,  யார் தவறு செய்கிறார்களோ அங்கு அமலாக்கத்துறை ரைடு வரும் திமுகவின் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் என்பது எங்களின் நோக்கம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் 1ஐ வெளியிட்டு விட்டார்  அடுத்து ஊழல் பட்டியல் இரண்டை வெளி...

தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர் இல்லாமல் ப்ரஸ் டூர்!!

ஷ்யாம் நீயூஸ் 18.07.2022  தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர் இல்லாமல் ப்ரஸ் டூர்!! தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1635 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று கொண்டிருக்கும் உயர்சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டுமானப்பணிகள் உட்பட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக சட்டமன்ற பேரவை குழு செயலாளர் தலைமையில் உறுப்பினர்கள் இன்று (18-07-2023) வருகைபுரிந்தனர். இதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ப்ரஸ் டூர் ஏற்பாடு செய்திருந்தனர். காலை 8.45 மணிவரை பெரும்பாலான செய்தியாளர்கள் வராத நிலையில் இரண்டு பேருடன் முதல் பாயின்ட்டான தூத்துக்குடி மருத்துவக்கல்லூரிக்கு பயணம் துவங்கியது. அந்த முதல் பாய்ன்டிலேயே ப்ரஸ் டூருக்கு அழைப்பையேற்று ஆதரவு அளித்த மேற்படி 2 செய்தியாளர்களையும் தவிக்கவிட்டு அடுத்த பாயின்டுக்கு புறப்பட்டுள்ளது செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனம். இதனால் மேற்படி செய்தியாளர்கள் இருவரும் வேறு வழியின்றி  பைக்கில் லிப்ட் கேட்டு கலெக்டர் ஆபீஸ் சென்ற அவர்கள் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதுடன் போன் மூலம் மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளித...

வானம் வசப்படும் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அமைச்சர் கீதா ஜீவன் உரையாடல்

ஷ்யாம் நீயூஷ் 17.07.2023  வானம் வசப்படும் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அமைச்சர் கீதா ஜீவன் உரையாடல் நான் முதல்வன் உயர்வுக்கு படி மற்றும் கல்வி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குடி வ உ சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார் என்று இருந்த நிலையில் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டதால் அவரால் இந்நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இயலவில்லை அதனைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார் அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மாணவ மாணவிகள் மத்தியில் கலந்து கொண்டு உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் நல்லவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் மாணவ மாணவிகள் தன்னைத் தானே பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும் கல்வியில் மாணவ மாணவியர்கள் முன்னேறுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன, வெற்றியடைய நிறைய கற்றுக் கொள்வதோடு திறமையை வளர்த்துக...

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்! போலீசார் கைது.

 ஷ்யாம் நீயூஸ் 07.07.2023 தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்! போலீசார் கைது. ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு குறித்து மேல் முறையீடு குறித்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரிய மனுவை இன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி. எஸ். முரளீதரன் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் சார் பழைய பேருந்து நிலையம் முன்பு திரண்டு மத்திய மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சாலை மாறியில் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சண்முகம்,மகிளா காங்கிரஸ் துணை தலைவி கனியம்மாள்,மாநில அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் மகேஸ்வரன் மாமன்ற உறுப்பினர்கள் சந்திர போஸ் எடிந்தா கற்பக கனி மண்டல தலைவர்கள் ராஜன் சேகர் செந்தூர் பாண்டி மாவட்ட துணைத் தலைவர்கள் துணைத் தலைவர்கள் விஜயராஜ் ,பிரபாகரன் மார்க்கஸ் சின்ன காளை,ச...